உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பெண்கள் இருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடம் இருந்து 52 கிலோ கேரள கஞ்சா மற்றும் 920 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து புதுக்குடியிருப்பு, உய்லன்குளம் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் மஞ்சள் ஆகியவற்றிற்கு மேலதிகமாக 100 அமெரிக்க டொலர் நாணயங்கள் 5, 1,725,000 ரூபா பணம், லொறி ஒன்று மற்றும் டிரக்டர் ஒன்றும் கைப்பற்றபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்