உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.4ஆக பதிவாகி உள்ளது. இத்தகவலை தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை (புதன்கிழமை) சுமார் 05.04 மணிக்கு தலைநகர் காத்மாண்டுவில் இந்த  நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கமானது நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து கிழக்கே 50 கிமீ தொலைவில் மையமாக வைத்து உண்டானதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்