உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


 புத்தூர் நவக்கிரி பகுதியில் நேற்றிரவு 2 கிராம் கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய விசேட குற்றத்தடுப்புப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இவர்கள் இருவரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் ஆவரங்கால் மற்றும் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 2 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்