Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



யாழ்.மாவட்டத்தில் தற்போது நடைபெற்றுவரும் 2010 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு மீளாய்வின்படி சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளனர் என யாழ்.தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் உதயனுக்குத் தெரிவித்தன.அத்துடன் 93 ஆயிரம் புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட மீளாய்வுப் பணிகளின் அடிப்படையில் இத்தகைய தரவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன எனவும் உத்தியோகபூர்வமான இறுதித் தரவுகள் இந்த மாதம் 31ஆம் திகதி வெளியாகும் என்றும் திணைக்கள அதிகாரி ஒருவர் உதயனுக்குத் தெரிவித்தார்.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
2009 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பு எதிர்வரும் ஜூன் மாத இறுதியுடன் செல்லுபடியற்றதாகிறது. இதன் பிரகாரம் 2010 ஆம் ஆண்டுக்குரிய புதிய வாக்காளர் இடாப்பு மீளாய்வுப்பணிகள் கடந்த 6 மாதங்களாக இடம்பெற்று வருகின்றன.
இதுவரை மீளாய்வின் 90 வீதமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அனைத்துப் பணிகளும் நிறைவுபெற்று விடும்.

மீளக்குடியமர்ந்தவர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என சுமார் 93 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக இணைக்கப்படுகின்றனர்.புலம் பெயர்ந்தவர்கள் , மரணமானவர்கள், வெளிமாவட்டங்களுக்கு இடப்பெயர்ந்தவர்கள் எனப் பல்வேறு காரணங்களால் 2009 ஆம்ஆண்டு இடாப்பில் இருந்த சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளனர்.

இந்த மீளாய்வுப் பணிகள் முழுமையாக முடிவடைந்ததும் இந்த மாதம் 31 ஆம் திகதி 2010 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பு மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அந்த வாக்காளர் இடாப்பு நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.2009 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் 8 லட்சத்து 16ஆயிரத்து 5 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்