உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


அசாம் மாநிலத்தில் இரண்டு இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை அதிதீவிர நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

அசாம் மாநிலத்தின் குவஹாத்திக்கு மேற்கே 44 கி.மீ தூரத்தில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. அதிகாலை 1.28 மணிக்கு உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், பார்பேட்டா மாவட்டத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 71 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பு காரணமாக வீட்டை விட்டு வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலநடுக்கங்களால் உயிரிழப்பு மற்றும் பொருள் சேதங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்