உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


யாழ். பெருமாள் கோவிலடி மணிக்கூட்டுக் கோபுர வீதியில் வைத்து இளைஞன் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.கார் ஒன்றில் வருகை தந்த நான்கு பேர்கொண்ட இனம்தெரியாத நபர்கள் நேர் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மோதித் தள்ளிவிட்டு, வாளினால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

 

காயங்களுக்கு உள்ளாகிய நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.பொலிஸார் மற்றும் விசேட அதிடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்