உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


உக்ரேனில் இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 22பேர் உயிரிழந்துள்ளதாக, உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும், இருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மூவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.கார்கிவ் விமானப்படை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 27பேருடன் பயணம் செய்த ‘அன்டோனோவ்-26’ என்ற விமானம் கிழக்கு நகரமான கார்கிவ் அருகே தரையிறங்கிக் கொண்டிருந்தபோது  விபத்துக்குள்ளானது.

இதில் 20 விமான பயிற்சி மாணவர்கள் மற்றும் 7 பணியாளர்கள் இருந்தாகவும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் விமான பயிற்சி மாணவர்கள் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

துணை உட்துறை அமைச்சர் அன்டன் கெராஷ்செங்கோ உயிரிழப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்தினார், இந்த சம்பவம் ஒரு அதிர்ச்சி என்று விபரித்தார். மேலும் விபத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

சமூக ஊடகங்களில் அதிகாரிகள் வெளியிட்ட விபத்தின் காட்சிகள், அன்டோனோவ்;-26 போக்குவரத்து விமானத்தின் புகைபிடிக்கும் பாகங்களை காட்டியது. விபத்துக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

இதேநேரம், கடந்த ஜனவரி மாதம் உக்ரைனில் ஏற்பட்ட விமான விபத்தில் 176 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்