உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


கும்கி படத்தில் இணைந்து நடித்திருந்த விக்ரம் பிரபு – லட்சுமி மேனன் ஜோடி, பிரபல இயக்குனரின் படம் மூலம் மீண்டும் இணைய உள்ளனர்.சுந்தரபாண்டியன் படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இப்படத்தை தொடர்ந்து கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு வெளியான றெக்க படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின், படிப்பில் கவனம் செலுத்திய லட்சுமி மேனன் நடிப்பிற்கு சில ஆண்டுகள் முழுக்கு போட்டார்.

இந்நிலையில் அவர் உடல் எடையை குறைத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார். இவர் அடுத்ததாக விக்ரம் பிரபு ஜோடியாக நடிக்க உள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே கும்கி படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர்.

கொம்பன், குட்டிப்புலி போன்ற படங்களை இயக்கிய முத்தையா இப்படத்தை இயக்க உள்ளார். ‘பேச்சி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளனர். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

 

கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் முதல்முறையாக ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்தில் முதன்மை நாயகியாக நடித்துள்ளார். பிரபல பாடகி உஷா உதூப் அக்‌ஷரா ஹாசனின் பாட்டியாக நடிக்கிறார்.

பெண்கள் கூட்டம் மிகுந்திருக்கும் இந்தப்படக்குழுவில் மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ் கலைராணி, ஷாலினி விஜயகுமார், சித்தார்தா சங்கர், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன் மற்றும் கிரன் கேஷவ் நடிக்கிறார்கள். ராஜா ராமமூர்த்தி இயக்கி இருக்கிறார். ஷ்ரேயா தேவ் டூபே ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சுஷா இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கீர்த்தனா முரளி மேற்கொண்டுள்ளார்.

படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது: சமூகத்தை பொருத்தவரை, ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ என்ற 4 பண்புகளும் ஒரு நல்ல பெண்ணின் தகுதியாக கருதப்படுகிறது. அப்படி நான்கு பண்புகளும் அமையப்பெற்ற ஒரு நல்ல பெண்ணை பற்றிய கதை இது. என கூறி உள்ளார்.

மலையாளத்தில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ‘ஜோசப்’ திரைப்படம் தமிழில்  ‘விசித்திரன்’ என்ற பெயரில் ரீமேக்காகி உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குநர் பாலா தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். ‘ஜோசப்’ படத்தை இயக்கிய பத்மகுமாரே அதன் தமிழில் ரீமேக்கான விசித்திரனையும் இயக்கி உள்ளார்.

இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹீரோயினாக பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்