உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். மேலும் பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாக உள்ளது.

செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், பாபி சிம்ஹா வனத்துறை அதிகாரி வேடத்திலும் நடிக்க உள்ளனர். ராஷ்மிகா மந்தனா கிராமத்து பெண்ணாக நடிக்க பிரத்யேக பயிற்சி எடுத்து நடிக்க உள்ளார். இப்படம் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது.

 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான முகின் ராவ் ஹீரோவாக அறிமுகமாகும் படத்திற்கு ‘வெற்றி’ என பெயரிடப்பட்டு உள்ளது.

பெண் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே நானி, நித்யாமேனன் நடித்த ‘வெப்பம்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் முகினுக்கு ஜோடியாக அஞ்சனா கீர்த்தி நடிக்கிறார்.

மேலும் அனுபமா குமார், கிஷோர், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க உள்ளார். பாடத்தொகுப்பு பணிகளை ஆண்டனி கவனிக்கிறார். ஷீர்டி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை முழுக்க முழுக்க சென்னையில் படமாக்க திட்டமிட்டு உள்ளனர்.

 

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்