உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ரிஷாத் பதியூதீன், சமுர்தீன் மொஹமட் ஆகியோர் வெளிநாடு செல்ல கோட்டை நீதிவான் தடை விதித்துள்ளார்.முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனை கைது செய்வதற்கு மன்னார் மற்றும் கொழும்பிலுள்ள அவரது வீடுகளுக்கு 6 பொலிஸ் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டன. எனினும், அவர் அவ்விரு வீடுகளிலும் இருக்க​வில்லை.முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் பாதுகாப்பு உத்தியோகத்தரான ​கொன்ஸ்டபிள் ஒருவரும் கணக்காளர் ஒருவரும் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ரிஷாத் பயன்படுத்திய கார்கள் இரண்டும் துப்பாக்கிகள் 2 என்பனவும் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்