உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாவத்தை பகுதியில் நேற்று இரவு வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் அதிகாரி வீதியால் வந்த உழவு இயந்திரம் ஒன்றை நிறுத்தியுள்ளார்.

இதன்போது குறித்த உழவு இயந்திரத்தை சாரதி நிறுத்த முற்பட்ட வேளையில் விபத்துக்குள்ளானதில் குறித்த பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரியான 42 அகவையுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவரது உடலம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்