உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


மாளிகாவத்தையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவனான மாகந்துர மதூஷின் சடலத்தை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற புதுக்கடை நீதிமன்ற நீதிவான், மரண விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

பொலிஸாருக்கும் வேறு பாதாள உலக சந்தேக நபர்களுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தின்போது மாகந்துரே மதூஷ் உயிரிழந்ததாக பொலிஸார் இன்று காலை அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இறந்தவரின் மனைவி சடலத்தை நீதவான் முன் அடையாளம் கண்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்