உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் `கள்ளபார்ட்’.வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் அரவிந்த்சாமி ரெஜினா  ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள் இப்படம் மிக பிரமாண்டமாக தயாராகிறது. என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் வசனங்களை ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார்.

மேலும் அரவிந்த்கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இளையராஜா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

 

ரவி சீனிவாசன் இயக்கத்தில் முருகானந்தம், மேக்னா ஹெலன், பாக்யராஜ், ஜி.எம்.குமார், இமான் அண்ணாச்சி, சார்லி, மதன் பாப், டான்சர் டியாங்கனா, பி.எல்.தேனப்பன்.

வேலு பிரபாகரன், வர்ஷன், நவீன், ராஜ்குமார், சக்ரி, ஷீலா, சாய்பிரியா இன்னும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும்  படம் கபாலி டாக்கீஸ்.

ஜெயசீலன் – முனிகிருஷ்ணன் இருவரும் கலையையும், ராதிகா – சங்கர் இருவரும் நடன பயிற்சியையும், தவசி ராஜ் சண்டை பயிற்சியையும், சினேகன், மதுரகவி, தமிழ் இயலன், விஜயசாகர் நால்வரும் பாடல்களையும் எழுத,

ராஜேஷ் கண்ணா படத்தொகுப்பையும் சபேஷ் – முரளி இரட்டையர் இசையையும் கவனிக்க, ஆர்.சுரேஷ்குமார் இணை தயாரிப்பில் மெளலி பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் பாலாவின் தம்பி பி.சந்திரமெளலி தயாரித்துள்ளார்.

கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து ரவிசீனிவாசன் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்