உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ஆள்மாறாட்டம் செய்த க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய ஒருவரை கற்பிட்டிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள சிங்கள பாடசாலையில் வெளிவாரியாக பரீட்சைக்கு தோற்ற வந்த மாணவர் ஒருவரை பரீட்சை கண்காணிப்பு குழுவினருக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த மாணவன் கற்பிட்டி பொலிஸார் அவரைக் கைதுள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள மாணவன் களணி பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருவதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர் உயர்தரப் பரீட்சை ஆரம்பித்த நாள் முதல் தனது சக நண்பனுசக்காக பரீட்சை எழுதி வந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்