உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


அச்சுவேலி பகுதியில் இருந்து இராச வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த காரொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இராச வீதி ஊடாக வேகமாக பயணித்துக் கொண்டிருந்த குறித்த கார் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

34 வயதுடைய வாகனத்தின் சாரதியே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.அவருடன் பயணம் செய்த 23 வயதுடைய இளைஞன் பலத்த காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.உயிரிழந்தவர் வசாவிளான் பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்