உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ஆனையிறவுப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர். ஏ – 9 வீதியில் பயணித்துக் கொண்டிருந்த ஓட்டோவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான எரிபொருள் தாங்கி வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாழ்ப்பாணம், நீராவியடிப் பகுதியை சேர்ந்த 58 வயதான இராதாகிருஷ்ணன் மீனாம்பாள் மற்றும் அவரது மகனான 28 வயதுடைய இராதாகிருஷ்ணன் கிருபானந்தன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான ஓட்டோவில் பயணித்த தாயும் மகனும் படுகாயமுற்ற நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் தாங்கியைச் செலுத்தி வந்த சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விபத்துத் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்