உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


முல்லைத்தீவு, முள்ளியவளை முறிப்புக் கிராமத்தில் பாற்பண்ணை பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடி காயங்களுக்கும் வெட்டுக் காயங்களுக்கும் உள்ளாகி, உயிரிழந்துள்ள நிலையில், அவரது சடலம்  முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்றிரவு (19) இடம்பெற்றுள்ளது.

ஒரு பிள்ளையின் தந்தையான ஜெயமோகன் நிரோசன் (32)  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் குடும்பப் பெண்​ முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

உயிரிழந்த குடும்பஸ்தரின் தலையில் இரண்டு வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன. பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இச்சம்பவம் குறித்து முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்