உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தலைமையில் அமையவிருக்கும் புதிய மந்திரி சபையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் இடம் பெறுகிறார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேபோல், கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள மருத்துவக் குழுவிழும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களை ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார்.

இந்நிலையில், பைடனின் மனைவி ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா என்பவரை ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார்.

இல்லினாய்சை பூர்வீகமாகக் கொண்ட மாலா அடிகா, கிரின்னல் கல்லூரி, மினசோட்டா பொது சுகாதாரப் பள்ளி மற்றும் சிகாகோ பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றவர்.

2008-ல் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் பிரச்சாரத்தில் சேருவதற்கு முன்பு சிகாகோ சட்ட நிறுவனத்தில் பணிபுரிந்தார். அதன்பின் ஒபாமா நிர்வாகத்தில் இணை அட்டர்னி ஜெனரலுக்கான ஆலோசனையாளராகத் தொடங்கினார்.

மாலா அடிகா ஜில் பைடனின் மூத்த ஆலோசகராகவும், ஜோ பைடன்-கமலா ஹாரிஸ் பிரசாரத்தின் மூத்த கொள்கை ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்