உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மண்டைதீவைச் சேர்ந்த சாவிதன் (வயது-7) சார்வின் (வயது -5) ஆகிய இருவருமே கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்