உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



15 Responses to “மரண அறிவித்தல்”

  • மனம் கனக்க வைக்கிறது உன் மரணச் செய்தி.
    பெற்றவரை பரிதவிக்க விட்டு நீ மட்டும் சென்றாயோ.
    இப் பூவுலகு போதும் என்று போயிற்றோ.
    நம் தேசத்தில் பறித்தவர்கள் போதாது என்று.
    உன்னையும் பறித்துச் சென்றானோ?
    லசி உன் துருதுரு கண்கள் எங்கே
    உன் பூவிதழ்ச் சிரிப்பு எங்கே அம்மா
    உன் அம்மா அழுத கண்ணீர் ஆறாய்ப் பாயுதம்மா.
    ஆற்றுவார் யாருமின்றி அழுது புரளுகிறாள்.
    உன்னை அழைத்துச் சென்ற காலனிடம் கூறு.
    உன் பெற்றோரையும் உற்றோரையும் அசுவாசப் படுத்தச் சொல்லி.
    உன் ஆத்ம சாந்திக்காய் கண்ணீர் பூக்களால் பிரார்த்திக்கின்றோம்
    மோகன்குடும்பம்

  • V.Nagendram:

    லசிந்தா கண்ணனின் அவர்களது மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன்.அவரின் இழப்பால் துயருறும் குடும்பத்தாருடன் துயர் பகிர்வதுடன், அவரின் ஆத்ம சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
    ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

  • மறுமலர்ச்சி மன்றம்:

    லசிந்தா கண்ணனின் அவர்களது பிரிவினால் துயருறும் அனைவருடனும் இணைந்து துயர் பகிர்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய உறவினருடன் இணைந்து பிரார்த்திக்கின்றோம். மறுமலர்ச்சி மன்றத்தின் சிறந்த வாசகராக இருந்து நூல்களை பெற்று வாசித்தும் மன்ற கூட்டங்களில் கலந்துகொண்டும் சிறப்பாக கலந்துகொண்ட மாணவியின் திடீர் மறைவு எமக்கு இழப்பாகும்

  • konesh Kudumpam (italy):

    லசிந்தா கண்ணனின் பிரிவினால் துயருறும் குடும்பத்தாருடன் துயரைப் பகிர்ந்து கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

  • பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே:

    செல்வி. லசிந்தா ஜெகதீஸ்வரன், அவர்களின் அகாலமரண அறிவித்தல் கேட்டு நாமும் ஆழ்த கவலை அடைகின்றோம். அவர்களின் மறைவால் மாறாத துயருற்று இருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அணைவருக்கும் நோர்வே பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றது. இவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிண்றோம்.
    பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே.

  • லசிந்தா கண்ணனின் பிரிவால் துயருறும் உற்றார் உறவினர்களுக்கு சுவிஸ்வாழ் ஊர் மக்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு , அவரின்
    ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் .
    சுவிஸ் வாழ் ஊர் மக்கள் .

  • selvarajah:

    அம்பாள் துணை,
    மகளின் பிரிவால் துயரில் வாழும் கண்ணன் குடும்பத்தினருக்கு மன அமைதி வேண்டியும் இறைவனடி சேர்ந்த கசிதாவின் ஆத்ம சாந்திக்காகவும் எல்லாம் வல்ல எம்பிராட்டியைப் பிராரத்திப்போமாக.
    ஓம் சாந்தி சாந்தி
    கணேசர் குடும்பம்

  • மகேந்திரம் நவம், இத்தாலி,:

    லசிந்தா கண்ணனின் பிரிவினால் துயருறும் குடும்பத்தாருடன் நாமும் இணையந்து துயரைப் பகிர்ந்து கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

  • T.BALAKUMAR FAMILE panippulam:

    மரணம் என்பது ஆறாத்துயரே.எது என்ன எப்படி நிகழ்ந்தாலும் மரணம் என்பது ஆறாத்துயரே.நடந்தவை நடந்தனவாக இருந்தாலும்.எனிமேலும் நடப்பவைகள் நடக்காமல் இருக்க உதாரணமரணமாக இருக்கவேண்டும்.லசிதா இளப்பு உறவுகளுக்கு ஆறாத்துயரே.இவரது ஆத்மா சாந்திக்காய் இறைவனை வேண்டுவோமாக. பணிப்புலம் த.பாலா டென்மார்க்

  • லசிந்தா கண்ணன் அவர்களின் மறைவில் துயருற்று இருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அணைவருக்கும் பண்கலை பண்பாட்டுக்கழகம் கனடா தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றது.இவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கும் பண்கலை பண்பாட்டுக்கழகம் கனடா நிர்வாகிகள்.

  • சச்சிதானந்தன் குடும்பத்தினர்:

    லசிந்தா உன் பிரிவித்துயர் கேட்டு சொல்லொணா துயர் கொண்டோம்
    உன் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்.

  • நெதர்லாந்து பண்-முக ஒன்றியம்:

    கனிந்த மொழி பேசிய லசிந்தா கவிழ்ந்தாயோ இன்றிரவு சூரியனோடு நலிந்து நம் உயிரும் நீந்ததுவோ நின் பிரிவித்துயர் கேட்டு.ஏனம்மா இம்முடிவு தானுனக்கு.நின் உடலையும் பாரம் தான் என்று எண்ணியதோ இப்பூவுலகு.வெட்கித்தலை குனிந்தோம் என்னும் இவ் உலகில் வாழ்வதற்கு சென்று வா எம் ஊர்ப்பிறப்பே மீண்டும் இவ் பூவுலவிற்கு.நாங்கள் ஆண்டவனையும் பிராத்திக்கிறோம் நின் ஆத்மா சாந்திக்கு.
    பிரிவித்துயரோடு;நெதர்லாந்து பண்-முக ஒன்றியம்.

  • லசிந்தா கண்ணனின் பிரிவினால் துயருறும் குடும்பத்தாருடன் நாமும் இணையந்து துயரைப் பகிர்ந்து கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
    சீலன் swiss

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    லசிந்தா கண்ணனின் பிரிவினால் துயருறும் குடும்பத்தாருடன் துயரைப் பகிர்ந்து கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

  • T.SANKAR.FAMILE..palarmo:

    புதல்வி லசித்த. லசி . அவர்களது பிரிவினால் துயருறும் அனைவருடனும் இணைந்து துயர் பகிர்வதோடு ஆத்மா சாந்தியடைய இணைந்து பிரார்த்திக்கின்றோம்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்