உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


அமெரிக்க தூதரகத்தின் தகவல்களையும், அமெரிக்க ராணுவத் தலைமையகம் பென்டகனின் தகவல்களையும் வெளியிட்டு உலக நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாங்கே.
இவர் அவுஸ்திரேலியாவின் முன்னாள் கணணி நிபுணர். அவரது சேவையை பாராட்டி சிட்னி அமைதி விருதுக்கான தங்கப்பதக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சிட்னி அமைதி பவுண்டேஷன் கடந்த 14 ஆண்டுகளில் இதற்கு முன்னர் மூன்று முறை மட்டுமே இந்த விருதினை அளித்துள்ளது. தென் ஆப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா, திபெத் தலைவர் தலாய் லாமா, ஜப்பானிய புத்த தலைவர் டாய்சகு இகேடா ஆகியோரைத் தொடர்ந்து இந்த விருது அசாங்கேவிற்கு அளிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள் அரசு நிர்வாகங்களில் வெளிப்படையான தன்மை மற்றும் நம்பகத்தன்மை மேற்கொள்ளப்பட வேண்டும் என அசாங்கே பல தகவல்களை வெளியிட்டுள்ளார். அவரது மன உறுதியை கௌரவிக்கும் வகையில் இந்த அமைதி விருதினை சிட்னி பவுண்டேஷன் அளித்துள்ளது.

உலக அரசுகளின் கடந்த கால ரகசிய நடைமுறைகளை உடைத்து எறியும் வகையில் அசாங்கே துணிச்சலாக தகவல்களை தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தகவல்கள் தாராளமாக வெளி வருவதற்கு புதிய பத்திரிகை இயலையும் அசாங்கே இணையதள ஊடகம் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார் என சிட்னி பவுண்டஷன் பாராட்டி உள்ளது.

உலக நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் உள்ளன. இந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்கள் தாங்கள் இருக்கும் நாடுகளின் தலைவர்கள் கொள்கை குறித்தும், அவர்களது செயல்பாடு குறித்தும் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு தொடர்ந்து பல ரகசிய தகவல்களை அனுப்பி வந்தனர்.

இந்த தகவல்களை பெற்ற அமெரிக்கா உரிய நடவடிக்கைகளை குறிப்பிட்ட நாடுகளின் மீது எடுத்து வந்தது. பல ஆயிரம் அமெரிக்க கேபிள் தகவல்களை அசாங்கே தனது விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியிட்டு அமெரிக்காவுக்கு அதிர்ச்சியையும் எரிச்சலையும் ஏற்படுத்தினார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்