உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


மர்மப் பொருள் ஒன்றை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மூவர் அது திடீரென வெடித்ததால் படுகாயமடைந்தனர்.

அவர்கள் மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் மாதகல் சகாயபுரம் பகுதியில் நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் இடம் பெற்றது.இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சு.சதுசன் சு.தனுசன் என்ற சகோதரர்களும் மற்றும் ஜீ.கம்சி ஆகியோரே காயமடைந்தனர்.வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த இந்த மூவ ரும் குறித்த மர்மப் பொருளைக் கண்டெடுத்துள்ளனர். அதனை எடுத்துச் சென்று வீட்டினுள் வைத்து விளையாடிக் கொண்டிருந்த போதே அது பெரும் சத்தத்துடன் வெடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக இளவாலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்