தமிழில் எழுத
பிரிவுகள்


மொன்றியலில் இருந்து புறப்பட்ட ஜெட் விமானத்தில் மின்கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவசரமாக ஹொரண்டோ விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.
அமெரிக்கா ஈகிள் ஏர்லைன்ஸ் விமானம் 52 பயணிகளுடன் காலை 8 மணிக்கு மொன்றியல் விமான நிலையத்தில் இருந்து சிகாகோ விமான நிலையத்திற்கு புறப்பட்டது. 

இந்த விமானம் புறப்பட்ட ஒரு மணிநேரத்தில் விமான கேபினில் மின்கசிவு பிரச்சனை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மொன்றியலில் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் காலை 9.04 மணிக்கு அவசரமாக தரை இறக்கப்பட்டது.

கேபின் மின் கசிவு பிரச்சனை குறித்து 15 நிமிடம் பைலட் எச்சரித்ததை தொடர்ந்து விமானம் தரை இறக்கப்பட்டது. இதில் யாரும் காயம் அடையவில்லை. 49 பயணிகள் வேறு விமானங்கள் மூலமாக சிகாகோ அனுப்பப்பட்டனர்.

மின்கசிவு தொடர்பாக அமெரிக்க ஈகிள் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் எட் மார்டலே கூறுகையில்,”வழமையான நடைமுறையின்படி விமானம் ஹொரண்டோ விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது” என்றார்.

கேபினில் உள்ள விளக்குகளை தொழில்நுட்ப நிபுணர்கள் அணைத்ததும் மின்கசிவு வாசனை பிரச்சனை சரி செய்யப்பட்டது. அமெரிக்க ஈகிள் ஏர்லைன்ஸ் விமானம் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு மீண்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்