தமிழில் எழுத
பிரிவுகள்


ஜேர்மனியின் ஹம்பர்க்கில் ஈரான் வங்கி உள்ளது. இந்த வங்கிக்கும் ஈரானின் ரகசிய அணு ஆயுத திட்டத்திற்கும் தொடர்பு உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
மே 23ம் திகதி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அயல் துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஹம்பர்க்கில் செயல்படும் ஈரான் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.

ஐரோப்பியர், ஈரானியர் வர்த்தக வங்கியாக ஹம்பர்க் ஈரான் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியானது 1971ம் ஆண்டு ஈரானிய வர்த்தகர்களால் ஹம்பர்க்கில் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வங்கி ஈரானின் ரகசிய அணு பரவல் திட்டத்தில் தொடர்பு கொண்டு இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டுபிடித்துள்ளது. கறுப்புப் பட்டியலில் அந்த வங்கியை வைப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய ஒருமித்த முடிவுப்படி ஹம்பர்க் ஈரான் வங்கி செயல்பாட்டுக்கு தடை விதிக்கவும் ஜேர்மனி அரசு முடிவு செய்துள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அணு ஆயுதங்களை ரகசியமாக தயாரித்து வருவதாக ஈரான் மீது சர்வதேச தடைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தங்களது அணு திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கான நோக்கமுடன் உள்ளது. அணு ஆயுதம் தயாரிப்பது எங்களது நோக்கம் அல்ல என டெகரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அணு ஆயுதத்திற்கு உதவும் யுரேனியம் செறிவூடுட்டலை ஈரான் நிறுத்த மறுத்ததால் ஜுன் மாதம் ஐ.நா கவுன்சில் ஈரான் மீது நான்காவது தடையை விதித்தது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்