உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 21 கிலோ காரட் தங்கத்தில் 63.856 கிலோ எடையில் செய்யப்பட்டுள்ள மோதிரம் ஒன்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
துபாயில் உள்ள டெய்ரா தங்க வணிக நிறுவனத்தில் வாடிக்கையார்களின் பார்வைக்காக இவை வைக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னர் உலக தங்க கவுன்சில் 5.1 கிலோ எடையில் தயாரித்த கம்மல் தான் உலக சாதனையாக கருதப்பட்டு வந்தது.

இந்த மிகப்பெரிய மோதிரத்தின் மதிப்பு குறித்து சவுதி அரேபியாவை சேர்ந்த கான்ஸ் நகைகடையின் இயக்குனர் அனில் தனக் கூறுகையில்,”கடந்த 2000 ஆண்டில் ஒரு அவுன்சின் தங்கம் விலை 250 டொலராக இருந்தது. அதே அளவு கொண்ட தங்கத்தின் தற்போதைய விலை ஆயிரத்து ஐநூறு டொலராக உள்ளது. இதன் மூலம் மோதிரத்தின் மதிப்பை கணக்கிட்டு கொள்ளவும் என்று” தெரிவித்தார்.

45 நாட்கள் தொடர்ச்சியாக 55 தொழிலாளர்கள் தினமும் 10 நேரம் இதற்கென உழைத்துள்ளனர் என்று மோதிரம் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த மோதிரத்தின் சர்வதேச மதிப்பு சுமார் 3 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

One Response to “21 கிலோ காரட் தங்கத்தில் 63.856 கிலோ எடையில் செய்யப்பட்ட மோதிரம்,”

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்