Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



உணவுக் கட்டுப்பாட்டைப் பேணிவரும் பலர் இரவு நேர விருந்துகளில் மது அருந்துவதன் மூலம் தங்களது அனைத்து முயற்சிகளையும் வீணடிக்கின்றனர்.

பிரிட்டிஷ் மக்களைப் பொறுத்தமட்டில் மூன்றில் இரண்டு பேருக்கு தங்களுக்கு விருப்பமான மதுவை அருந்துவதன் மூலம் எவ்வளவு கலோரியை அவர்கள் உள்வாங்குகின்றனர் என்பது முற்றிலும் தெரியாது.

இருப்பினும் பலர் உடல் பருமனைக் குறைக்கவும் முயலுகின்றனர். பெண்கள் உணவுக் கட்டுப்பாட்டுக்காக இனிப்பை புறக்கணிக்கின்றனர், ஆனால் ஒரு கிளாஸ் சம்பேன் மதுபானம் 95 கலோரிகளைக் கொண்டது என்பது அவர்களுக்குத் தெரியாது.

ஒரு கிளாஸ் வைன் 134 கலோரிகளைக் கொண்டது. ஜின்னும் அப்படித்தான். பலர் தமது எடையைக் குறைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் அவர்களிடம் மது அருந்துவதை குறைக்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது.

மதுவுக்கு எதிராக விழிப்புணர்வுச் செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் டிரிங்க்வெயார் தர்ம ஸ்தாபனம் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் பருவம் அடைந்த 2000 பேர் மத்தியில் அந்த அமைப்பு ஆய்வுகளை நடத்தியுள்ளது.

மது அருந்துபவர்களுள் பத்தில் ஒருவர் தான் அதுபற்றிய கவலையான எண்ணத்துடன் காணப்படுகின்றனர். மூன்றில் இரண்டு பங்கினர் தமது வங்கி மீதியைப் பற்றி மட்டும் தான் கவலைப் படுகின்றனர்.

இன்னும் மூன்றில் இரண்டு பங்கினர் தாங்கள் சாப்பிடுவதைக் குறைத்து, அல்லது துணிமணிகள் வாங்குவதையும், வேறு பொருள் கொள்வனவுகளையும், செலவுகளையும், உல்லாசப் பயண செலவுகளையும் குறைத்து பணம் சேமிக்கத் தயார்.

ஆனால் இவர்கள் யாரும் சேமிப்பதற்காக மதுவுக்கு செலவிடுவதைக் குறைக்கத் தயாரில்லை. மதுவில் சுத்தமான பல கலோரி கொழுப்பு இருப்பதை இவர்கள் யாருமே அறியவில்லை.

மது அருந்துபவர்களில் மூன்றில் ஒன்றுக்கும் குறைவானவர்களே இதுபற்றி அறிந்து வைத்துள்ளனர்.

ஆண்கள் ஒரு நாளைக்கு நான்கு அலகுக்கு மேல் மது அருந்துவதையும் பெண்கள் ஒருநாளைக்கு மூன்று அலகுகளுக்கு மேல் மது அருந்துவதையும் தவிர்த்துக் கொள்வது நல்லது என பிரிட்டிஷ் அரசு சிபார்சு செய்துள்ளது.

இதற்கு மேல் அருந்துவது வயிற்றில் தொப்பையைத் தோற்றுவிக்கும். இது காலப் போக்கில் நீரிழிவு மற்றும் இருதயக் கோளாறு என்பனவற்றுக்கு வழிவகுக்கும், என்று வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

One Response to “உணவுக்கட்டுப்பாட்டில் இருப்போர் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்! மதுவிலுள்ள கலோரிகள்”

  • அங்கெ குடிபவர்கள் குடிக்கட்டும் அதனல வார வருமானத்தை வைத்து படிபவர்கள் படிக்கட்டும்
    .இதுல இருந்து நிங்க என்ன பண்ண போறிங்க ?

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்