உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்எகிப்தில் போராட்டத்தின்போது பொதுமக்களை சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட் டது. எகிப்தில், பொதுமக்கள், போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அதிபர் பதவியில் இருந்து முபாரக் விலகினார். அவரும், அவரது 2 மகன்களும் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தின் போது போலீசார் மற்றும் ராணு வத்தினரால் சுமார் 800 பேர் கொல்லப்பட்டனர். தற்போது, அங்கு ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. போராட்டத்தின் போது, ஆயுதமின்றி நிராயு தபானி யாக நின்ற பொது மக்களை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் மீது ராணுவ ஆட்சி யாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தின் போது பொது மக்களை சுட்டு கொன்ற போலீஸ் அதிகாரி மொகமத் இப்ராகிம் ஆப்டெல் மோனம் என்பவருக்கு ராணு கோர்ட்டு மரண தண்டனை விதித்துள்ளது. இவர் சுட் டதில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

15 பேர் காயம் அடைந்துள்ளனர். அதற்காகதான் அவருக்கு இந்த தண்டனை வழங்கப் பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது இவர் கோர்ட்டில் நேரில் ஆஜராகவில்லை. அவர் கண்டு பிடிக்கப்பட் டாலோ அல்லது நேரில் ஆஜரானாலோ இந்த தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யலாம். அப்போது இந்த வழக்கு விசாரணை மீண்டும் நடத்தப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் லஞ்ச ஊழல் மற்றும் பொதுமக்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டதற்காக முன்னாள் மந்திரி ஹபீப் எல்-அட்லிக்கு 12 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்