Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்உயிராபத்தை விளைவிக்கும் ஈ – கோலி பக்டீரியா தற்போது ஐரோப்பாவை அலற வைத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பல நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுவிட்டார்கள். ஜேர்மனியில் ஆறு பேருடைய உயிர்களை காவு கொண்டுவிட்டது. டென்மார்க்கில் மூன்றுபேர் இந்தக் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஈ -கோலி பக்டீரியா மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கும் தொற்றும் என்பது அச்சமூட்டுவதாக உள்ளது. இதனால் பீடிக்கப்பட்டால் வயிற்று நோய் ஏற்படும். சிறு நீரகங்கள் பாதிக்கப்படும். மலத்துடன் 30 வீதம்வரை இரத்தப்போக்கு காணப்படும். நீண்ட கால சுகயீனத்தை ஏற்படுத்தும். அதைவிட முக்கியம் மரணத்திலும் கொண்டு சென்று நிறுத்திவிடும். சிறு நீரகங்களை செயற்பட முடியாது திகைக்க வைக்கும் மோசமான பக்டீரியாவாக உள்ளது.

இதுவரை காலமும் இறைச்சியில் இருந்து ஆரம்பித்த கிருமி தற்போது மரக்கறி வகையில் இருந்து ஆரம்பித்துள்ளது. கொலன்ட்டில் இருந்து வரும் அக்குவக்கா, அத்தோடு தக்காளி, சலாட் போன்றவைகளில் இதன் தாக்கம் இருக்கிறது. டென்மார்க்கில் உள்ள உணவு விற்பனை நிலையங்களில் இருந்து வெளிநாட்டு மரக்கறிகள் அகற்றப்பட்டு வருகின்றன. டென்மார்க் அக்குவக்காவிலும் இந்தக் கிருமி இருக்கிறதா என்ற ஆய்வுகள் தொடங்கிவிட்டன. பறவைக் காய்ச்சலுக்குப் பிறகு உலகத்தை கதிகலங்க வைத்துள்ளது. இந்தக் கிருமி வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார தாபனம் எச்சரித்துள்ளது. ஜேர்மனியில் இதனால் பாதிக்கப்பட்டவரில் 67 வீதமானவர் பெண்களாவர். கூடுதலாக பெரியவர்களையும் பிள்ளைகளையும் இது வேகமாகத் தாக்குகிறது. ஜேர்மனி, டென்மார்க், கொலன்ட், சுவீடன், பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகளில் இது பரவியுள்ளது.

34 Responses to “ஐரோப்பாவை அலற வைக்கிறது ஈ-கோலி பக்டீரியா”

 • இன்று அண்ணன் பாலா அவர்களும் மற்றும் அட்மின் நிர்வாகிகளும் என்னுடன் தொடர்பு கொண்டு இவ் உண்ணாவிரதத்தை உடனடியாக நிறுத்தும் படி கட்டளையிட்டணர்.தங்களுக்குள் எதுவித கருத்து வேறுபாடுகளும் இல்லையென்றும் தாங்கள் எல்லோரும் நடத்திய நாடகமே இது என்றும், தன்னால் எதை இழந்தாலும் இந்த இணையத்தை இழக்க முடியா தென்ற பாலா அண்ணணின் உறுதி மொழியால் என் உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டுள்ளது.அத்தோடு என் குடும்ப வைத்தியர் எனக்கு ”ஏய்க்க துஷக் கெலியே”என்ற நோய் இருப்பதனால் உடனே உண்ணாவிரதத்தை நிறுத்தும்படியும் கூறினர். காவல் துறையினரின் அனுமதியோடு அனைத்து மக்களும் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.கப்டன் ச்சசி அவர்கள் தலைமறைவாகவுள்ளார்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   இது நாடகம் என்று சொல்லவில்லை….
   நானும் petrol can ஐ ஒரு கிழமைவரை துறந்து வைத்தபடியால் அதுக்குள் காகம் பீச்சிபோட்டு. இண்டைக்கு தீக்குளிக்கும்பொழுது அதுவும் எரியமாட்டு எண்டிட்டு. பிறகுதான் அறிந்தேன் காகம்பீச்சின எரிபொருள்களுக்குள்ள எரியும் தன்மை போய்விடுமாம்.
   கப்டன் கிருமிகளைப்பற்றி தனது விஞ்ஞான அறிவை விருத்திசெய்ய Japan இற்கு போய்விட்டார். Japan இலிருந்து இணையத்தை பார்த்தவண்ணம் இருக்கிறார், ஆனால் அங்குள்ள கணனிகள் Japan மொழியில் இருப்பதால் தமிழில் பதில் எழுத முடியாத நிலை.
   அவர் கிருமிவிஞ்ஞானியாக பட்டாதாரியாக திரும்பிவந்தவுடன் தனது வாசகபயணத்தை தொடருவார், எங்களுக்கும் இனி பல கிருமிகளைப்பற்றி விழிப்புணர்ச்சிகளைத்தருவார்.

 • நான் உதுக்குள்ள வந்து ஏதாவது எழுதலாமோ? வாசிக்க வாசிக்க எனக்கும் ஒருக்க உதுக்குள்ள போகவேனும் போலக் கிடக்குது.என்னையும் விடுவியளே? கேட்டுப்போட்டு வாறதுதான் என்ரை பண்பாடு.பதிலை கெதியென்னத்தாருங்கோ.
  அது சரி உந்த அட்மினுக்கு என்ன நடந்தது.ஒரு நாளில் பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்து………………………………..

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   hahaha
   permission granted

   • எனக்கு இப்ப கால நேரம் சரியில்லை.கவுண்ட் டவுண் இன்னும் முடிய ஒருநாள் தான் இருக்குது.பெருவாரியான மக்கள் என் வீட்டு முன்றலை நோக்கி சுலோக அட்டைகளுடன் வந்து கொண்டிருக்கிறார்கள்.ரீவி காறங்களும் வருகிறார்கள்.ஒரு சுலோக அட்டையில் ”தலைவா நீ இருப்பதை விட உண்ணாவிரதம் இருப்பதே மேல்”
    என்று எழுதப்பட்டுள்ளது.உண்ணாவிரத நேரடி ஒளிபரப்பை இந்த இணையத்தில் பார்க்கலாம். ஒருத்தரும் இதில வந்து என்னை பேசாதையுங்கோ நான் சரியான பாவம்.

 • பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்
  சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்
  பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர்
  உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர்

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  இங்கு செய்திகளில்/கட்டுரைகளில் கருத்து எழுதும் வாசகர்கள் எவரும் தங்கள் கருத்துக்களை வாசிக்கும்படி கட்டாயப்படுத்துவதாகவோ அல்லது அவற்றை வாசிக்கும்வண்ணம் விமர்சனம் செய்ததாக நான் இன்று வரையும் எங்கும் வாசித்ததில்லை. இணைய நிர்வாகமும் இதை வற்புறுத்தியதும் இல்லை.
  தெருவில் நடக்கும்போது கல்லும் இருக்கும், முள்ளும் இருக்கும் நாம் தான் பார்த்து நடக்கவேண்டும் எதுவும் (காலில்) குத்தாமல் போய்சேர வேண்டிய இடத்தை அடையும்வரை.

 • தம்பி சுடர்ஷனுக்கு மீண்டும் பணிவுடன்.உங்கள் கருத்து சுதந்திரத்தை பறித்தெடுக்க நான் முயலவில்லை .அதற்கான தேவையுமில்லை .புத்திமதி கூறவும் முனையவில்லை .அதற்கு நான் பண்டிதருமில்லை பெரசியனுமில்லை. அன்றில் உங்கள் பேரனோ பூட்டனோவுமில்லை. நானும் உங்களை போல் ஒருவனே. நீண்டகாலமாக பல்வேறு தலைப்புகளில் வந்த சகல செய்திகளையும், அதற்கான கருத்து பரிமாறல்களையும் மிக உன்னிப்பாகவும் அக்கறையுடனும் வாசித்து வந்த பலரில் நானும் ஒருவன். நீவிர் கூறுவது போல் திடீரென்று பாய்ந்த பூனை அல்ல.அங்கெல்லாம் அநேகமானோரின் கருத்துக்களும் விமர்சனங்களும் மிகவும் காத்திரமானதும்,பிரயோசனமானதுமாக (ஒரு சிலரின் அலம்பல்களை தவிர) இருந்ததை கண்டு வியப்பில் ஆழ்ந்தேன் .இங்கு நான் சொல்ல முனைந்தது என்னவென்றால் மிகவும் முக்கியமான ஒரு செய்தியை (மனித உயிர்களுடன் சம்பந்தப்பட்ட) ஒரு நகைச்சுவைக்குரிய விடயமாக மாறிவிடக்கூடாதே என்ற ஆதங்கம் கள்ளுக்கொட்டில் உரையாடல் வீடியோ கிளிப்பை இந்தமாதிரி கையாளலாம் .இது ஒரு சீரியஸ் ஆன விடயம்.இந்த ஸ்டைலில் போனால் அதன் தாற்பரியம் குன்றிவிடும் எனக்கு புரிகிறது.எங்கள் முகத்தில் புன்னகையை கொண்டுவந்தது இந்த இணையமே.இவர் என்ன நேத்து வந்தவர் எங்களுக்கு புத்திமதி சொல்ல வந்துவிட்டார் என்று நீங்கள் நினைப்பது.இங்கு சீனியர் யூனியர் அல்ல விடயம் இவன் என்னத்தை சொல்ல முனைகின்றான் என்பதை உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாய் சிந்தித்தால் சில வேளை புரியக்கூடும் .அடுத்து எனது வார்த்தை பிரயோகத்தை பற்றி கூறியிருந்தீர்கள் .அங்கும் உணர்வு மேலீட்டினால் தப்பான தவறான புரிதலே.எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நாம் ஒரு பழமொழி, முதுமொழியை பாவிக்கும் போது கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டி உள்ளது.உ +ம் : ஒருவன் தானும் பிரயோசனம் பெறாமல் அடுத்தவனையும் பிரயோசனம் அடியவிடாமல் இருக்கும் சந்தர்ப்பத்தில் வைக்கல் பட்டடை நாயின் பழமொழியை கூறுமிடத்து “எ பாரடா உவன் என்னை நாயாமாம்” இது போன்ற தப்புக்களை தவிர்பதட்காவே ஜெந்துக்கள் என்ற சொல்லை பாவித்தேன்.அப்பாவும் குறை.குறை காண்பதிலிருந்து கொஞ்சம் விலகி இவன் என்னத்தை சொல்ல வாரான் எண்டதை பார்க்க முயலலாம்.கலட்டி சுள்ளான் கூறுகிறார் இன்றைய உலகில் இயந்திரங்களோடு இயந்திரங்களாக காலத்துடன் போட்டியிட்டு இறக்கை கட்டி பறந்து கொண்டு இருப்பதாக.ஊரில் இருக்கும் எனக்கு அது ஒன்றும்
  .

  • ஐயா,நீங்கள் திரும்பவும் அதே பிழையை மீண்டும் விட்டுள்ளீர்கள், பிழையை செய்த நீங்கள் ஏன் ஒரு மன்னிப்பு கேட்க கூடாது, ஏன் விட்ட பிழையை ஒத்துக்கொள்ளக்கூடாது, அதையும் இதையும் சொல்லி சமாளிக்கிறீர்கள்!
   நீண்டகாலமாக இவ் இணையத்தை பார்த்த உங்களுக்கு வெளிநாட்டில் நம்மவர் படும் பாடு தெருயாமல் இருக்க சாத்தியமில்லை, செய்த தப்பை மறைக்க பொய் சொல்வதாக தெரிகிறது.
   வழர்ந்து வரும் புதியசந்ததி திறமசாலியானவர்கள்,நேரமையானவர்கள், விட்ட தப்புக்கு உடனே sorry சொல்லக்கூடியவர்கள், நீங்கள் நினைப்பது எல்லாம் சரி என்று நினைக்காதீர்கள். யானைக்கும் அடி சறுக்கும். அதே போல் சிறு துரும்பும் பல் குத்த உதவும் .

   • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    சூரியா, பற்பெயர் மன்னா, எங்கள் மாத்தையா,
    இந்த மாமனிதர் திசையறிகருவி இல்லாமால் நடுக்கடலில் திசையறியாது தித்திக்கிறார் எங்கு தொடங்கினேன், எங்கு இப்ப வந்து நிக்கிறேன், இப்ப எந்த திசையை நோக்கி பயணிப்பது என்று தெரியாமல் – தன் கருத்துக்களில்.
    இவர் 7 முழுப்பக்கங்களும் தன்முதல் கருத்தை ஞாயம் படுத்தி எழுத எத்தனித்தாலும் இவரின் முரண்பாடான கருத்துக்கள் என்னை கவரப்போவதில்லை – ஏனெனில் சில இடங்களில் தான் என்ன சொல்ல முயல்கிறார் என்பது அவருக்கே குழப்பமாக உள்ளது. இருந்தும் ஒரு சகவாசகராக இவரை நான் நாகரிகமாக மதித்துக்கொள்வேன், இன்னொருவரை குத்தும்வரையும் !!!

    31 ம் திகதியின் கருத்தில் சற்று முன்னேற்றம் தெரியிது, இருந்தும் 1980 இலிருந்து 1990 வரையும்தான் முன்னேற்றம்.
    இன்னும் 20 வருட இடைவெளி இருக்கிறது.
    _
    admin இற்கு ஒரு வேண்டுகோள்,
    சச்சி அண்ணைக்கு இந்த போதகர் போற்றிய புத்திமதியை அகற்றும் வண்ணம் வேண்டிக்கொள்கிறேன்.
    இந்த பண்டைய மாமனிதரின் வருகையின் பின் சில (regular customers ) நிரந்தர கருத்து வாசகர்களின் வருகையை தவிர்த்துகொண்டுள்ளனர்.
    இணையம் வாசகர்களை இணைக்கவேண்டும், பிரிப்பதில்லை – அதுவும் இணையத்தின் நோக்கங்களின் ஒன்று என்றால்.
    _
    நிரந்தர வாசகர் ஒருவருக்கு உதவும் பொருட்டு மட்டும்:
    Genga Count Down: இன்னும் ஒரு நாள் இருக்குது.

    • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

     ஒருவரை தனிப்பட்ட முறையில் தாக்காத என் கருத்துக்களை வெட்டுவதில் கூட கவனம் செலுத்தும் admin , ஒருவரை தாக்கும் கருத்துக்களை அனுமதிப்பதில் admin இன் நேர்மைத்தனம் எனக்கு விளங்கவில்லை.
     அல்லது பெரியவர்கள் எது எப்படி எழுதினாலும் அனுமதிக்கப்படும் என்று அடிப்படையாக விளங்கிக்கொள்ளலாமா – எதிர்காலங்களில் எனது நேரத்தை மிச்சம் பிடிக்க?
     கருத்து வாசகர்களில் வயது குறைந்தவர்களில் ஒருவன்.

    • அதுதான் எனக்கு இப்ப என்ன செய்கிறதெண்டு தெரியாம இருக்கே.உந்த அட்மின் காறங்கள் ஒரு குரூப்பாத்தான் அலையிறாங்கையா எதச் சொன்னாலும் கேட்க மாட்டாங்கிறாங்களே.உவங்க எல்லாரும் சேர்ந்து வைக்கப்போறாங்களையா ஆப்பு.அது சரி சுதர்ஷா இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது.VERY BAD VERY BAD .

 • கிருமிகள் பர்றபாட்டை பாருங்கோ.
  யார் யாரை தின்னலாம் என்று நிக்கினம் .
  பெரிய கிருமி உலகத்தை ஆளப்பாக்கிது
  லேர்றாய் வந்து எல்லாரையும் வெருட்டப்பாக்கிது.
  பாவம் சின்னனுகள்.

  • நான் பார்க்கத்தான் சுள்ளான் ஆனால் சுளுக்கு எடுக்காமல் விடமாட்டன்.

   • இப்ப இலங்கை நேரம் 0415 காலை வேலை பளுவினால் உங்கள் குதர்க்கத்துக்கு பதில் தர முடியவில்லை ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்டரீதியில் பதில் தருகின்றேன் .கொஞ்சம் நாள் எடுக்கும். கலட்டி சுள்லானுக்கான பதிலோ இது சுள்ளான் சுளுக்கு எடுக்கப்போவதாக சொல்லியிருந்தார் .எடே தம்பி நீ புலம் பெயர்ந்த காலத்திலைதான் உந்த சுளுக்கு எடுக்கிறது,உளுக்கு மிரிக்கிறது (அதுக்கு காலாலை பிறந்திருக்கவேனும் என்று ஒரு rule )அண்ணாக்கு பாக்கிறது எண்டெல்லாம் நடைமுறையில் இருந்தது அதெல்லாம் இப்ப மலை ஏறிப்போச்சுதடா தம்பி . லேசர் சிகிச்சை.நூற்றுக்கணக்கான ஜெல்கள்,பாம்கள் ointmentkal எண்டு எக்கச்சக்கமான வசதிகள் அண்ணாக்குக்கு ஒரு நாள் ஆசுப்பத்திரியிலை நிண்டு ஒரு சிம்பிள் tronsile operation .கதை சரி .எதோ நீங்கள் இஞ்சை இருந்து மூட்டை கட்டேக்கை இருந்த பிளாநிலை தான் நாங்கள் இப்பவும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் எண்ட நினைப்பு .எனவே சுளுக்கு எடுக்கிறதை விட்டு உருப்படியாக எதாவதை அலசுவோம் நானும் அந்த இலுப்பை மரங்களும், புளிய மரங்களும் (பலா ,தென்னை,வாழை ,கமுகு என்று சொன்னால் அது புளுகு ) சூழ்ந்த அந்த அழகிய குக்கிராமத்தில் பிறந்து ,தவழ்ந்து புளிதியை குடித்து வாழ்ந்தவன் நீயும் அதே பெயரை சுள்ளானுக்கு முன்னாலை வச்சுக்கொண்டு என்னை அட்டாக் பண்ண வாறாய்.முக மூடியை களட்டிபோட்டு கோச்சி,கொப்பர் உனக்கு இட்ட அழகிய பெயருடன் உலா வா பாக்கலாம் அதுதாண்டா அழகு.சில வேளை நீ எனது உறவினன் ஆகவும் இருக்கலாம் ஏனெனில் கலட்டி என்ற அந்த அழகிய குக்கிராமத்தில் ஐம்பது வீதத்துக்கு மேலானோர் எனது கிட்டிய இரத்த உறவினர் .மீண்டும் சநதிப்போம். கொளுவல் முறையில் அல்ல நல்ல சுமுகமாக. கலட்டி மனோகரன்

  • பாம்புக்கு என் மறுமொழி. நான் லேட் ஆக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக தான் வந்துள்ளேன் .அது சரி ஏன் பாம்பு,சுள்ளான் ,நுள்ளான் ,பணிப்புலத்தான் .சாந்தையான் என்று தோன்றுவதை விடுத்து முக மூடியய் கழற்றி பாலகுமார் ஒரு இடத்தில் கூறியது போல் தில் இருந்தால் உங்கள் சொந்த பெயர் முகவரியுடன் (உங்கள் தாய் தந்தையர் இட்ட பெயர்களுடன் ) அழகாக இந்த இணையத்தில் நீங்கள் வலம் வரலாம்தானே. நன்றி .வணக்கம். மீண்டும் மீண்டும் உங்களுடன் கொஞ்சி குலாவ ஆவலுடன் காத்திருக்கும் உங்களில் ஒருவன் நான் என்றும் கந்தையா மனோகரன் கலட்டி

   • நாங்கள் தில் இல்லாதவர்கள் தான், ஏன் முதுகெலும்பு கூட இல்லாதவர்கள்.அதே போல் இந்த இரண்டு சொற்களும் உங்களுக்கும் பொருந்தும்.எங்கள் அதிவிசேட தில் இல்லாத நாய்ப்படையின் ஆய்வின்படி———
    கலட்டியில் கந்தையா மனோகரன் என்ற பெயரில் ஒருவருமே இல்லை.இப்ப விளங்குகின்றதா யார் தில் இல்லாதவர் என்று.நாங்களும் உங்களுடன் கொஞ்சிக் குலாவ றெடி.ஏன் என்றால் நாங்கள் எல்லோரும் ஒரே கூட்டம் தானே.இந்தப் புனை பெயர்கள் அனைத்தும் எம் பெற்றோர்களால் அழைக்கப்படும் செல்லப் பெயர்களே.

    • கலட்டி இரணியனின் கூற்று சுத்தப்பொய்.அபாண்டமானது.நான் புனை பெயரில் அலையவில்லை.இரணியன் இடையில் வந்து கலட்டியில் குடி ஏறினவர் போல.கலட்டியின் மூத்த குடிமக்கள் அறிவர் இது இயற் பெயரா அன்றில் பொய் பெயரா என்று.நான் பிறந்து வளர்ந்த வீட்டின் . (இப்போ அது வெறும் இப்பிலிப்பி காடு ) சுற்று வட்ட எல்லைகளை இங்கு சொல்கிறேன் தெற்கே முன் வீடு செல்லத்துரை வாத்தியார் வீடு (உனக்கு தெரியுமோ நானறியேன் )வடக்கே பின்புறம் ஐயாத்துரை +சட்டம்பி கந்தையா வீடு மேற்கே அம்மான் கந்தசாமி (பொலிசு) கிழக்கே பூசாரி செல்லம்மா வீடு கலட்டி வயிரவர் கோவிலுக்கும் சிங்கப்பூர் நடலத்தின் வீடுக்கும் இடையே உள்ள இலுப்பை மரங்கள் நிறைந்த வாழவும் எங்களுடையதே பிற்காலத்தில் விற்று ஆயிற்று.இது போதுமா இன்னும்வேணுமா? vanakkam

 • seetosee:

  மரக்கறி எண்டு ஒன்று இருகிர்தலதனே இந்த பிரசனை அத இல்லாம பணிட்ட

 • seetosee:

  மரக்கறிமாடும் சாப்பிடேலாது, பண்டியும் சாப்பிடேலாது, கோழியும் நாங்கள் இனி சாப்பிடமாட்டோம் (எங்கள் அமைப்பின் சின்னமென்பதால் + Avian Flue), இப்ப மரக்கறியும் சாப்பிட ஏலாதென்பதால் இனி மனிதரை சாப்பிட வைக்கும் நிலைமைக்கு தள்ளபட்டுவிட்டோம்…. யாரோ இப்ப கஞ்சா இலையில் கஞ்சி காச்சி குடிப்பதாக ஒரு வதந்தி உலவுது…கீரையை விட அது இங்க மலிவு, சில நேரம் உண்மையாகவும் இருக்கலாம்…

  வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் மரக்கறி வகைகளில் மட்டும்தான் குறிப்பிட்ட கிருமி சேர்த்துப்போட்டு ஏத்திறனாங்கள் – அம்மாட குஞ்சுகள் இங்க safe , ஏனெண்டால் முக்கால் பங்கு கடல்பரப்பை வாற 20 வருஷம் குத்தகைக்கு எடுத்துப்போட்டு இருக்கிறோம்.

  மீனிலயும் கிருமி இருக்குதெண்டு இனி இந்த இணையத்தில செய்தி வந்தால் அதுக்கு பிறகு நாங்கள் இணையத்தை பார்க்கிறேல எண்டு முடிவெடுத்துவிட்டோம்…

  ஒரு வழிதான் இருக்கு அத சொன்ன விசரன் எண்டு சொல்வினம்

 • சச்சி:

  கிருமிகளை கிருமிகளே தாக்குவது சரித்திரத்தில் நடக்காத ஒன்று.கெங்கா அவர்களே.

  • சச்சி அண்ணைக்கு ஒரு பணிவான வேண்டுகோள் .நீங்கள் சரித்திரத்திலை நடக்காத ஒன்று என்று குறிப்பிடுகீர்கள். இது என்ன எள்ளலாளன் துட்டகைமுனு சண்டை இல்லை அண்ணே . இது விஞ்ஞான தொழில்நுட்ப விழக்கம்.அண்ணே தெரிந்தவர்களிடம் கேட்டு அறிவை விருத்தி செய்ய முயலவேணும் அதை விடுத்து வீண் விதண்டா வாதங்களை தவிர்த்தால் இந்த இனைய தளத்தை உபயோகிகிக்க்கின்றவர்களின் அதி பெறுமதியான காலம் விரயமாகாது.பக்டீரிஆக்கள் வைரசுக்கள் இன்னும் இன்னோரன்ன நுன்னியிரிகளை ஒன்றின் மூலம் இன்னொன்றை அழிக்கலாம்.இது மில்லியன் வருடங்களாக உயிரினங்கள் தோன்றிய காலலத்திலிருந்தே இயற்கையாகவே நடக்கின்ற ஒரு விடயம் அதையே நவீன மருத்துவ தொழில்நுட்பம் சூட்சுமமாக ஆராட்சிகளை செய்து நோய்களை குணப்படுத்த முயல்கிறது. .நன்றி

 • எம்மூரவர் ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளில் பரந்து பட்டு வாழ்வதாலும் எம்மவர் உபயோகிக்கின்ற இணைய தளம் என்ற கோதாவிலும் இந்த ஆக்கம் மிகவும் பயனுள்ளதொன்றாகும் .இருந்தபோதும் இதிலிருந்து தப்பித்துக்கொள்ள எடுக்கவேண்டிய தற்காப்பு முறைகள் இல்லாதது ஒரு சிறிய வெற்றிடமாக நினைக்கின்றேன்.உங்கள் இந்த உன்னதமான பணிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.இனி மீண்டும் மீண்டும் உங்களுடன் உறவாட விழையும் என்றும் உங்களில் ஒருவன் நான் மனோகரன் – கலட்டி .இதுவரை கையாலாகதவனாக இருந்துவிட்டேன் காரணம் தகவல் தொழில்நுட்பத்தில் நான் இன்னும் தவழும் குழந்தை நிலையில் .இப்போ ஓரளவு தேர்ச்சி அடைந்துள்ளேன்.தம்பி பாலகுமாருக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள் .அவருடன் வெகு விரைவில் பயனுள்ள பல விடயங்களை தனிப்பட்ட ரீதியில் பகிர்ந்து கொள்வேன்

 • கொலண்ட் நாட்டில் இருந்து வரும் மரக்கறி வகைகளில் இப் பக்டீரீயா இருப்பதனால் அந்த நாட்டில் இருக்கின்ற எங்கள் அம்மாளின் குஞ்சுகள் எப்படி இருக்கின்றார்கள்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   மாடும் சாப்பிடேலாது, பண்டியும் சாப்பிடேலாது, கோழியும் நாங்கள் இனி சாப்பிடமாட்டோம் (எங்கள் அமைப்பின் சின்னமென்பதால் + Avian Flue), இப்ப மரக்கறியும் சாப்பிட ஏலாதென்பதால் இனி மனிதரை சாப்பிட வைக்கும் நிலைமைக்கு தள்ளபட்டுவிட்டோம்…. யாரோ இப்ப கஞ்சா இலையில் கஞ்சி காச்சி குடிப்பதாக ஒரு வதந்தி உலவுது…கீரையை விட அது இங்க மலிவு, சில நேரம் உண்மையாகவும் இருக்கலாம்…

   வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் மரக்கறி வகைகளில் மட்டும்தான் குறிப்பிட்ட கிருமி சேர்த்துப்போட்டு ஏத்திறனாங்கள் – அம்மாட குஞ்சுகள் இங்க safe , ஏனெண்டால் முக்கால் பங்கு கடல்பரப்பை வாற 20 வருஷம் குத்தகைக்கு எடுத்துப்போட்டு இருக்கிறோம்.

   மீனிலயும் கிருமி இருக்குதெண்டு இனி இந்த இணையத்தில செய்தி வந்தால் அதுக்கு பிறகு நாங்கள் இணையத்தை பார்க்கிறேல எண்டு முடிவெடுத்துவிட்டோம்…

   • நெதர்லாந்தில் ஜீவிக்கின்ற சுதர்ஷன் தம்பிக்கு ஒரு பணிவான வேண்டுகோள் . மிகவும் பிரயோசனமான ஒரு தகவலை தந்த இந்த இணையத்துக்கு உங்கடை பிரதிபலிப்பை பார்த்தால் ஏதோ வேலை வெட்டி இல்லாதவன் பூனையை பிடித்து சிரைச்ச கதை மாதிரி இருக்குது உங்கடை கருத்து .உங்களுக்கு இஷ்டமில்லை என்றால் பேசாமல் இருப்பது மிகவும் நன்று. அதை விடுத்து தானும் தின்னாமல் வாற மாட்டையும் தின்னாமல் விடுகின்ற ஜெந்துகளை நாம் ஆண்டாண்டு தோறும் அனுபவிக்கின்றோம் எனவே இனியாவது உணர்ந்து இந்தமாதிரி பித்தலாட்டங்களை தவிர்க்கவும்

    • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

     என்னடாப்பா திடீரென்று ஒரு பூனை சம்பந்தமில்லாமல் குறுக்க பாயுது…
     21 வது நூற்றாண்டில் தகவல்-தொழில்நுட்ப உலகத்திற்குள் தவழும் உங்களை புரிந்துணர்வோடும் மரியாதையோடும் நாகரிகமாகவும் சகவாசகனாக வரவேற்கிறேன்.

     இச்சொற்களை (ஜெந்துகள், பித்தலாட்டங்கள், சிரச்சல்) சாதாரணமாக (sportive ஆக) எடுத்துக்கொள்ளக்கூடிய என்னிடம் பிரயோகித்திருக்கிறீர்கள் – உங்கள் (நீங்கள் யாராகவும் இருந்திட்டுபோங்க) அதிர்ஷ்டம் இது.
     வேறு வாசகரிடம் இதை முயற்ச்சிருந்தால் குழந்தை தவழும் நிலையை தாண்டி இந்த நவீன உலகில் எட்டி நடை போடும் பருவத்திற்கு நகர்வது சந்தேகமாகவே இருந்திருக்கும்.

     இச்செய்தி பிரியோசனமற்றது, இணையம் அநாவசியமற்ற தகவலை பரிமாறுவது என்று கூறுவது இங்கு நான் இல்லை.

     முக்கியமாக நான் பேசுவதற்கு (= கருத்து எழுதுவதற்கு) இஷ்டப்படுவதும் இல்லாததுமான முடிவெடுக்கும் உரிமையை யாருக்கும் கொடுக்கவில்லை, கொடுப்பதாக எண்ணமும் இல்லை. கண்டிப்பாக இதில் உங்கள் புத்திமதியை கேட்பதாயும் இல்லை – அத்துடன் கேட்கவேண்டிய தேவையும் எனக்கு தென்படவில்லை.

     ´பணிவான வேண்டுகோள்´ என பிழையாக தாழ்மையான சொற்களோடு ஆரம்பித்துவிட்டீர்கள் என்று நம்புகிறேன்.

     அது சரி ´கங்கா கனடா´ வின் கேள்விக்கு நான் அவருக்கு அளித்த பதிலுள்ள இருவரின் கருத்துப்பரிமாற்றத்தில், உங்களுக்கு இதில் என்ன சம்பந்தமில்லாத தலையீடு?

     • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

      admin , எனது இந்த கருத்தை வெட்டுவதென்றாலோ அல்லது மாற்றங்கள் செய்வதென்றாலோ ´manoharan kandiah:
      May 30, 2011 at 8:26 pm ´ இக்கருத்தையும் பிரசுரி(த்திரு)ப்பது இணையத்திற்கு நேர்மையற்றதே – வயோதிபர் என்றாலோ இல்லையோ என்பது இங்கு முக்கியமற்றது!!!!
      கருத்து வாசகர்கள் எல்லா வயதுடையவர்களாகவும் இருக்கலாம் என்று நம்புகிறேன்.

     • நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் சுதர்சன்,வயது வந்த பெரியவரே பிழையான நாகரிகமற்ற சொற்களை பாவித்துள்ளார், பின்பு இவர் எப்படி நல்லதை கூறுவார்,செய்வார்?பெரியவருடைய வருகையே தப்பான பாதையாக அமைந்து விட்டது, இனி இவர் சொல்பவை எல்லாம் செல்லாகாசு. வாத்தியார் கால்வைக்கும் போது, பிள்ளைகள் இப்பவும் இலங்கை பாடசாலையில் கல்வி கற்கிறார்கள் என்று நினைத்து இருக்கிறார், இன்னும் புதிய உலகத்தை காணவில்லை போல் இருக்கிறது. பிரம்போடு வந்த மாதிரி தெரிகிறது. இங்கு பிரம்பு பாவித்தால் பதில் என்னவாக இருக்கும் என்பதும் தெரியாதுபோல் இருக்கிறது.நல்ல கருத்தை அன்பாக பண்பாக சொல்ல தவறிவிட்டார்,

    • நாங்கள் இன்றைய உலகில் இயந்திரங்களோடு இயந்திரங்களாக காலத்துடன் போட்டியிட்டு கால்களில் இறக்கை கட்டிப் பறந்து கொண்டிருக்கின்றோம்.ஊரில் இருக்கும் உங்களுக்கு இது தெரியாது.ஒரு நகைச்சுவைக்காக எழுதப்பட்ட விடயத்திற்கு தேவையற்ற முறையில் தேவையற்ற சொற்பதத்தை பாவித்துள்ளீர்கள். எம்மவர்களின் முகத்தில் புண்ணகையைக் கொண்டுவந்தது இவ் இணையமே.அதற்கு ஆதரவு தந்தவர்கள் சுதர்ஷன்,கெங்கா,சச்சி,கலட்டிப்புயல் வடிவேலு என்னும் பலர் உள்ளனர்.யாரையும் புண்படுத்தியோ அல்லது இணையத்தின் பெயரைக் கெடுக்கவோ இவர்கள் முட்படவில்லை.இதை தயவு செய்து மனோகரன் கந்தையா அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
     நல்ல நண்பர்களைப் பெற்றவர்கள் உலகில் எது இல்லாவிடினும் உள்ளவனாகின்றான்.அதேபோல் நட்பில்லாது வாழ்பவனோ எல்லாமிருந்தாலும் ஏழையாக வருந்துகின்றான்.நட்பில்லா வாழ்வு வறண்ட பாலைவனத்திற்குச் சமன்.நண்பர்கள் பாலையையும் சோலையாக மாற்றுவர்.அப்படிப் பட்ட அருமையான நண்பர்களை இவ் இணையமூலம் பெற்றேன்.எக்காரணத்திற்காகவும் அவர்களை குறைகூறுவதை என்னால் ஏற்கமுடியாது.

     • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

      நன்றி நன்றி. உணர்ச்சிவசப்பட வைக்கும் வார்த்தைகள் இவை…

     • நந்தகுமார்:

      எடுத்த எடுப்பில் ரொப் கியர் போட்ட மாதிரி இருக்கு உங்கள் கருத்துக்கள்…. நண்பன் இல்லாதவர் எது இருந்தாலும் ஒரு மாடி வீட்டு ஏழை… நன்று… நன்று.” i லைக் இட்

   • நெதர்லாந்திலுள்ள சுதர்ஷன் தம்பிக்கு ஒரு பணிவான வேண்டுகோள் .இந்த இணையத் தளத்தை நடத்துபவர்கள் எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் அதை மேட்கொள்ளுகிறரர்கள் என்பதை நீவிர் அறிவீரோ யான் அறியேன் ‘
    அம்மாள் குஞ்சுகள் என்பதை தவிர்த்து எம்மூரவர் என்று நாகரீகமாக குறிப்பிடலாம்தானே .எனக்கென்றால் அது ஏதோ நக்கல் பாஷை போலத்தான் தெரிகிறது .மற்றும் ஏதோ கடலிலில் ஒரு பகுதியை குத்தகைக்கு எடுக்க முயல்வதாகவும் குறிப்பிட்டிருந்தாய். இந்த பம்மாத்துகளில் இருந்து விலகி நல்ல பயனுள்ள கருத்துக்களை வழங்கினால் அது உனக்கும் நல்லது அடுத்த்தவனுக்கும் நன்மை பயக்கும்

    • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

     வகுப்பு 2 – (நன்னடத்தை)பாடம் 3 – மாணவன் சுதர்சன்.
     சரி சரி இன்றிலிருந்து விழிப்புணர்ச்சியாகிவிட்டேன்.
     1 / நாகரிகமற்ற ‘அம்மாள் குஞ்சுகள்’ என்ற சொல்லை நான் பாவிப்பதில்லை. இனிமேல் ‘எங்கட ஊர் ஜெந்துகளின் பித்தலாட்டத்தின் சிரச்சலையும் பம்மாத்துக்கள் ஆன நாகரிக சொற்களையும் தான் குறிப்பிடுவேன்.
     2 / கடல் குத்தகை உறுதியை கிழித்துப்போட்டு மீனை சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்கிறேன்.
     3 / இதுவரை என் நன்மை மட்டும் கருதி பம்மாத்து விட்டு வந்த நான் மற்றவர்களுக்கு நலனளிக்கும் பயனற்ற சி பயனுள்ள முரண்பட்ட புத்திமதிகளை மட்டும் கூறி நான் தான் திறம், நான் சொல்லுவது மட்டும் தான் உண்மை, என் விருப்பத்திற்கு ஏற்றால்போல் தான் ஏனையோர் கருத்தெழுத வேண்டும் என்ற சர்வாதிகார இறுமாப்பு மனப்பாங்கோடு கருத்துகள் எழுதலாம் என சபதம் எடுத்துவிட்டேன்.
     இங்க மரக்கறியில்மட்டும் கிருமி ஏறவில்லை….
     மறுபடியும்: நான் மேல் எழுதிய கருத்து/பதில் ‘கங்கா கனடா’ வை நோக்கி.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்