Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்டென்மார்க்கில் தமிழர்கள் குடியேறிய வெள்ளிவிழா நிகழ்வுகள் ஆங்காங்கு நடைபெற ஸ்கெயான், ராம், றிங்குபிங் நகரங்களை இணைத்த டேனிஸ் தமிழ் தோழமை ஒன்றியம் எதிர்வரும் 11.06.2011 ம் திகதி சனிக்கிழமை மாலை தனது மகத்தான வெள்ளி விழாவைக் கொண்டாடுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் கடந்த 25 வருடங்களில் கட்டியமைத்த வாழ்வு வெற்றிபெற்றுள்ளதா..? என்ற கேள்விக்குக் கிடைக்கும் பதிலே இந்த வெள்ளி விழாவின் சிறப்பு எத்தகையது என்பதை விளக்கும்.

டென்மார்க் போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் சங்கங்களை ஆரம்பிப்பது கெட்டித்தனமான விடயமல்ல, அவற்றை வெள்ளி விழா வரை கொண்டு வருவதே மாபெரும் கெட்டித்தனமாகும். அத்தகைய ஓர் இலக்கை இந்த நகரங்களின் மக்கள் எட்டித் தொட்டிருப்பதே அவர்களின் வெற்றியின் முதல் அடையாளமாகும்.

டேனிஸ் மக்களுடன் நல்லுறவை வளர்த்து, இந்த நாட்டில் உள்ள அதி சிறந்த வளங்களை பயன்படுத்தி, வாழ்வை மேம்படுத்துவதில் எத்தகைய வெற்றி கண்டிருக்கிறார்கள் என்பது எமது அடுத்த அளவீடாகும்.

முதலாவது தலைமுறையில் வந்த தமிழ் மக்கள் இரண்டாவது தலை முறையை உருவாக்குவதில் மிகச்சிறந்த முறையில் பணியாற்றி, ஆற்றல் மிக்க இரண்டாவது தலை முறையை உருவாக்கியிருக்கிறார்கள்.

அவர்களின் வெற்றி மகத்தான வெற்றி..!!ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்தனியாக எடுத்துப் பார்த்தால் கடின உழைப்பால் முன்னேறி, சொந்த வீடுகள், வாகனங்கள், திருப்திகரமான குடும்பப் பொருளாதாரம், சிறீலங்காவில் வாழ்ந்திருந்தால் சேர்த்திருக்கக் கூடிய பொருளாதாரத்தைவிட குறைந்தது ஐம்பது மடங்காவது மேலதிக உயர்வைத் தொட்டுள்ளார்கள். இரண்டாவது தலைமுறை இதையும் தாண்டி முன்னேற்றம் பெறும் என்பது இப்போதே தெரிகிறது.

பொருளாதாரத்தில் அமோக வெற்றி…!!

கல்வியில் நல்ல முன்னேற்றத்தை இரண்டாவது தலை முறை எட்டித் தொட்டுள்ளது. தமிழர்களின் எதிர்பார்ப்பான டாக்டர், என்ஜினீயர் போன்ற பட்டங்களை அதிகமான பிள்ளைகள் இலகுவாக சுமந்து நிற்கிறார்கள். அதையும் தாண்டி பீ.எச்.டி படிப்பையும் முடித்து நகரத்திற்கு பெருமை தந்துள்ளார் ஒரு மாணவர்.

கல்வியில் கண்ட வெற்றி ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கிறது..!!

கலைகளில் எவ்வாறு முன்னேறியுள்ளார்கள் என்பது அடுத்த அளவீடாகும். இந்தப் பகுதியில் ஏறத்தாழ எல்லோருமே கலை ஆர்வம் கொண்டவர்கள். சிறந்த பரதநாட்டிய கலைஞர்கள் உள்ள நகரம். அரங்கேற்றம் செய்த பிள்ளைகள் பலர் உண்டு. பரதத்தை தமிழகம் சென்று படித்து சாதனை படைத்த ஆசிரியையும் உள்ள நகரமாகும்.

நாடகத்துறையில் சிறந்த நடிகர்களை கொண்ட நகரமாக ஸ்கெயான் நகரம் இருக்கிறது. நாடக நடிகர்களை பெருமளவு உருவாக்க வேண்டுமென்று நடாத்தப்பட்ட நடிப்புப் பட்டறை முயற்சிகள் இங்கு பெருவெற்றி பெற்றுள்ளன. இங்குள்ள கலைஞர்கள் சிறந்த திரைப்பட நடிகர்களாகவும் புகழ் பெற்றுள்ளார்கள். நல்ல பாடகர்களும் பலர் உள்ளனர்.

டேனிஸ் தமிழ் தோழமை ஒன்றியம் முத்தமிழ் விழாக்களை பத்தாண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக நடாத்திய தாபனமாகும். நல்ல தமிழ் மேடைப் பேச்சுக்களால் உருவாக்கப்பட்ட தலைமுறையை கொண்டு நிமிர்ந்து நிற்கிறது. தாயகப்பற்று, தமிழ் மொழி நேசம், கலைகள் மீதான நாட்டம், ஒட்டுமொத்த முன்னேற்றம் என்று வகுக்கப்பட்ட இலக்குகளை தாண்டி பட்டொளி வீசிப்பறக்கிறது தமிழ் வாழ்வு.இருபத்தைந்து வருடங்கள் வாழ்ந்தோம், புலம் பெயர்ந்த எமது வாழ்வு நாசமாகிவிட்டது என்று ஊடகங்களில் ஒப்பாரி வைப்போர் பலர் நம்மிடையே உண்டு. அதற்காகவே பல ஊடகங்களும் உண்டு. இவற்றுக்குள் கிடந்து அழிந்து விடாமல், இதோ பார் வாழ்வை வெற்றிகரமாக நடாத்தியுள்ளோம் என்று மார்தட்டிக் கூறியிருக்கிறார்கள் இங்குள்ள மக்கள்.ஐம்பதாவது ஆண்டு பொன்விழாவிற்கான இலக்கை இப்போதே திட்டமிடுங்கள், கச்சிதமாக செயற்படுங்கள். ஆங்காங்கு தெரியும் சிறு சிறு குறைபாடுகளை களைந்து, மேலும் புத்தெழுச்சி பெற வேண்டுமென்று உங்களை அனைத்து தமிழ் மக்களின் சார்பில் வாழ்த்துகிறோம்..

9 Responses to “வெள்ளி விழா காணும் டெனிஷ் – தமிழ் தோழமை ஒன்றியம் Skjern”

 • வெள்ளி விழா காணும் டெனிஸ் தமிழ் தோழமை ஒன்றியத்தின் விழா மிக விமர்சையாக நடைபெற என் மனமுவர்ந்த வாழ்த்துக்கள். இவ் விழாவையும் நீங்கள் உங்கள் இணையத்தின் மூலம் ஒளிபரப்பு செய்கின்றீர்களா?

  • admin:

   உங்கள் ஆர்வம் விளங்குகிறது.. அடுத்த நாள் நிகழ்வின் படங்கள் போடுகிறோம்.

 • SEETOSEE:

  சுதர்சன் நிங்க படிதது காலயாடி நான் குடித்தது heineken beer

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   இல்லை இல்லை. நான் காலையாட்டி ஆட்டி படிக்கவில்லை, காலில் அடி விள விள படித்தேன். இடைக்கிடை Carlsberg இம் குடியுங்கோ Denmark காரர் குறைநினைப்பினம்.
   உங்கள் பெயரை C2C என்றும் சுருக்கலாம்.

 • சாந்தையூர் தனஸ்ரீ:

  தோழமை என்பது நட்பான பழக்கம்
  டென்மார்க்கால் தமிழர்கள் உயர்ந்தார்களா ! இல்லாவிட்டால்
  தமிழர்களால் டென்மார்க் உயர்ந்ததா ! (சிந்தனை செய் மனமே)

  • குஞ்சங்கலட்டி சொக்கன்:

   தமிழரான தாழ்மையற்ற நாம் தாழ்மையற்ற டென்மார்க் ஆகிய நாட்டிற்கு புலம்பெயர்ந்து வந்து வாழும் நாட்டின் வளர்ச்சியிலும் உறுதுணையாக இருந்து தமிழரான நாமும் 25 வருடங்களாக உயர்ந்துள்ளோம்.
   கோபம் பாசம் வாழ்த்து தோழமை நட்பு ஒரு தரப்பினர் மட்டும் இவற்றை வெளிப்படுத்த முடியுமா?

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  இன்று கால் நூற்றாண்டின் வெள்ளிவிழா வெற்றிவிழாவாகவாக அமையும் என வாழ்த்துவதோடு, இந்த அமைப்பு நான் பொல்லூண்டும் வயதில் அரை நூற்றாண்டின் வெள்ளிவிழா கொண்டாடுவதையும் அறியும் நற்ப்பாசை ஏற்ப்படுத்தும்முகமாக அமைப்பி(ன் நிர்வாகத்தி)ற்குள் இளைஞர்களையும் ஈடுபடுத்திக்கொண்டால் இதை சாத்தியப்படுத்தலாம் என்று தாழ்மையாக வேண்டிக்கொள்கிறேன்.

  25 கால வழிப்பாதையின் பெருமைமிக்க விடயங்களை வாசிக்கும்பொழுது பிரமிக்கவைக்கிறது – கொஞ்சம் பொறாமையோடு எங்கள் travel agency / human smugglers மார்களிலும் இப்ப கோவத்தையும் தூண்டுகிறது ஏனடா பாவியளே உங்கட route களில் Denmark மாதிரியான நாடுகள் இல்லாமல் போய்விட்டதே என்று. சந்தோசம்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   பிஎச்.டி = Ph.D = Philosophical Doctorate = நான் அறிந்தளவில் மருத்துவத்துறையில் அதியுயர்ந்த கல்வித்தரங்களில் இதுவும் ஒன்று.
   இக்கல்வித்தரத்தை Scandinavia நாடுகளான Norway, Denmark & Finland ஆன நாடுகளில் Ph.D என அழைக்கப்படும்.
   இது அருமையோ பெருமை. வாழ்த்துக்கள்.
   _
   Sweden ம் உள்ளடங்குதோ என்று சரியாகத்தெரியாது – யாராவது தெரிந்தால் ஊர்ஜிதப்படுத்தவும். அறிந்துகொள்வோம்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   மறந்துவிட்டேன்……
   புரட்சிகரமான வசனநடைகளை அவதானித்தால் இணையம் பழைய பலமான நிலையை திரும்பி அடைந்துவிட்டது மாதிரி ஒரு சந்தேகம் – என் சந்தேகம் உண்மையாக இருந்தால் யாவருக்கும் மகிழ்ச்சியே.
   எங்களுக்கும் கடைசிநாட்கள் ஆஸ்பத்திரி சாப்பாடு சாப்பிட்டு அலுத்துப்போச்சு
   🙂 🙂

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்