தமிழில் எழுத
பிரிவுகள்


ஏமன் தலைநகர் சனாவில் நேற்று அதிகாலை முதல் அதிபர் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் கடும் மோதல் நடந்தது.
இதில் 41 பேர் பலியாயினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். எதிர்ப்பாளர்களான பழங்குடியினர் அலுவலகம், ஆளும் கட்சித் தலைமையகம் உள்ளிட்ட பல்வேறு அரசுக் கட்டடங்களைக் கைப்பற்றினர். 

எதிர்க்கட்சித் தலைவரான ஷேக் சாதிக் அல் அமரின் வீட்டின் மீது நேற்று ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதிபர் மாளிகை வட்டாரத்தைப் பாதுகாக்கும் படைகள் நேற்று ராணுவத்தின் ஒரு பிரிவின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியது.

ராணுவத்தில் இருந்து பிரிந்து எதிர்ப்பாளர்களுடன் சேர்ந்த ராணுவப் பிரிவின் அலுவலகம் என்பதால் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்