தமிழில் எழுத
பிரிவுகள்


உலகப்பொருளாதாரத்தில் ஆசிய நாடுகளில் ஒன்றான சீனா மிக அபார வளர்ச்சியை எட்டி வருகிறது. தற்போது உலக நாடுகளில் நம்பர் ஒன் வல்லரசு நாடாக அமெரிக்கா திகழ்கிறது.
இந்த அமெரிக்காவின் வளர்ச்சியை சீனா இன்னும் 5 ஆண்டுகளில் கடந்து விடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். சீனா வளர்ச்சியை அமெரிக்கா விரும்பவில்லை. 

சீனாவின் வளர்ச்சியை அமெரிக்கா தடை செய்கிறது என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. இந்த கருத்தை அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ரொபர்ட் கேட்ஸ் முற்றிலும் நிராகரித்தார்.

அமெரிக்கா-சீனா உறவு மிக நல்ல நிலையில் உள்ளது. இருப்பினும் இரு தரப்பினர் இடையே தொடர் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்றார்.

சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் உரை நிகழ்த்த சென்ற போது அவர் இதனை குறிப்பிட்டார். இந்த மாநாட்டில் சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லியாங் குவாங்லி பங்கேற்கிறார்.

சீனா பல ஆயிரம் ஆண்டுகளாக சக்தி சாய்ந்த நாடாக திகழ்கிறது. அதன் வளர்ச்சியை அமெரிக்கா கட்டுப்படுத்தவில்லை. சீனா உலக சக்தியாக திகழ்கிறது. நாங்களும் உலக சக்தியாக திகழ்வோம் என்றார்.

கடந்த மாதம் அமெரிக்காவில் சீனா ஜெனரல் சென் கூறுகையில்,”அமெரிக்க ராணுவத்திற்கு இணையாக போட்டி போட வேண்டும் என்ற எண்ணம் சீனாவுக்கு இல்லை. தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் தருவதை நிறுத்த வேண்டும் இல்லை என்றால் சீனா-அமெரிக்க உறவில் பாதிப்பு ஏற்படும்” என எச்சரித்து இருந்தார்.

One Response to “சீனாவின் வளர்ச்சியை அமெரிக்கா தடை செய்கிறது என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.”

  • கட்டைகளுக்கும் கட்டைகளுக்கும்தான் எப்பவுமே பிரச்சனை, சுழன்று வரும் சுறாவளியை நம்பினாலும் சுத்திவரும் கட்டையரை நபவே கூடாது,

Leave a Reply for அறிவு

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்