Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மத்திய அல்பெர்டா பகுதியில் சனிக்கிழமை சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் வெர்மான் பகுதியில் இருந்து 4 இருக்கை கொண்ட மூனே எம் 20 விமானம் ஆல்டாவில் உள்ள கிலம் பகுதியை நோக்கி வந்தது.

அப்போது இந்த விமானம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென மாயமானதாக தெரிவிக்கப்பட்டது என போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜான் கூறினார்.

ஆர்.சி.எம்.பி பொலிசார் சனிக்கிழமை அதிகாலை பாஷா பகுதி அருகே 4 மணி நேரம் தேடுதல் பணியை மேற்கொண்டார்கள். அப்போது சிறிய விமானம் விவசாய நிலத்தில் நொறுங்கி கிடப்பது தெரியவந்தது.

விபத்துக்கு உள்ளான விமானத்தில் இருந்து கருகிய புகை வாடை வந்து கொண்டு இருந்தத்தை தொடர்ந்து தேடுதல் குழுவினர் அந்த விமானத்தை கண்டுபிடிக்க முடிந்தது என சார்ஜன்ட் ஜெப் பக்சி கூறினார்.

விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். அவர்களின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. விபத்து குறித்த விசாரணை துவங்கியது. விமானம் நொறுங்கி விழுந்த இடத்தில் உடல்களை மீட்பதற்கு கனரக கருவிகளை ஆர்.சி.எம்.பி பொலிஸ் அதிகாரிகள் பயன்படுத்தியதாக கூறினர்.

போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு விசாரணையை நடத்துகிறது. நொறுங்கிய விமான பாகங்கள் தொடர் ஆய்வுக்காக எட்மாண்டன் கொண்டுவரப்படுகிறது. விமானம் கிடந்த பாஷா பகுதி ரெட்டீர் எல்கை அருகே உள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்