உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்நியூசிலாந்தில் திங்கள்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.0 ஆக பதிவானது.
கிறிஸ்ட்சர்ச்சில் நிலநடுக்கம் நிகழ்ந்த போது கட்டடங்கள் குலுங்கின. அவற்றிலிருந்த பொருட்களும் குலுங்கியதாகவும், பொருட்சேதம் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் 3.7 என்ற அளவில் நிலநடுக்கம் ஒன்றும் அங்கு ஏற்பட்டது. நியூசிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான கிறிஸ்ட்சர்ச்சில் கடந்த ஆண்டு பெப்பிரவரி மாதம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான நிலநடுக்கத்தில் 181 பேர் பலியானார்கள்.

ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாகின. இதைதொடர்ந்து செப்டம்பர் மாதம் 7.0 என்ற அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. கிறிஸ்ட்சர்ச் பகுதியில் ஓராண்டுக்குள் ரிக்டர் அளவுகோலில் 6.0 லிருந்து 7.0 வரையிலான நிலநடுக்கம் நிகழ வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்