உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


கியூபா நோக்கி சென்ற பிரிட்டிஷ் விமானத்தில் இருந்த பயணி திடீர் ரகளையில் ஈடுபட்டதால் விமானம் ஹாலிபாக்சில் அவசரமாக தரை இறக்கப்பட்டது.
இது குறித்து ஆர்.சி.எம்.பி பொலிசார் கூறியதாவது: தாமஸ் குக் ஏர்லைன்ஸ் விமானம் வாரடெரோ நகரை நோக்கி சென்ற கொண்டிருந்தது. ஒரு பயணி ரகளை செய்ததால் அந்த விமானம் திடீரென மதிய நேரத்தில் ஹாலிபாக்சில் அவசரமாக தரை இறங்கியது.

விமான பயணத்தில் தடை ஏற்படுத்திய 38 வயது பிரிட்டிஷ் நபர் மன நல சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விமானம் தரை இறங்கும் போது பொலிசார் தயாராக இறுக்குமாறு விமான ஓட்டி வேண்டுகோள் விடுத்து இருந்தார் என சார்ஜண்ட் பிரிக்டிட் லேகர் கூறினார்.

குறிப்பிட்ட பயணி மீது எந்த வித குற்ற நிகழ்வும் கூறப்படவில்லை. அந்த பயணியின் மனநலனை கண்டறிய அவர் ஹாலிபாக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விமானத்தில் என்ன நடந்தது என்பதை அவர் விவரிக்க மறுத்தார். விமானத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனவே பயணி மீது பயங்கரக் குற்றச்சாட்டுகள் இல்லை என்பதை மட்டும் தெரிவித்தார். பயணியை தரை இறக்கிய பிரிட்டிஷ் விமானம் சிறிய கால தாமதத்திற்கு பின்னர் புறப்பட்டு சென்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்