Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ருவாண்டா நாட்டில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக முன்னாள் ராணுவத் தளபதிக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதி்மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1994ஆம் ஆண்டு ருவாண்டாவில் நடைபெற்ற இனப்படுகொலையில், சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் துட்சி மற்றும் ஹுட்டு இனத்தைச் சேர்ந்தவர்கள்.

ருவாண்டா இனப்படுகொலையில் முக்கியப் பங்கு வகித்த அப்போதைய ராணுவத் தளபதி பிசிமுங்கு 2002ஆம் ஆண்டு, அங்கோலா நாட்டில் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிசிமுங்கு உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில், 250 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை 395 நாட்கள் நடைபெற்ற நிலையில், 1994இல் ராணுவத் தளபதியாக இருந்த அகஸ்டின் பிசிமுங்குவுக்கு 30 ஆண்டுக் சிறைத் தண்டனை விதித்து தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பை வழங்கிய அசோகா டி சில்வா, இலங்கை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இலங்கை அதிபர் ராஜப‌க்ச, ராணுவ அதிகாரிகள் போர்க்குற்றம் புரிந்ததாக குற்றச்சா‌‌ற்று எழுந்துள்ள நிலையில், இலங்கையைச் சேர்ந்த நீதிபதி ஒருவர், இனப்படுகொலை குற்றச்சா‌‌ற்‌றில் ருவாண்டா இராணுவத் தளபதிக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4 Responses to “ருவாண்டா ராணுவத் தளபதிக்கு 30 ஆண்டு சிறை,”

  • சச்சி:

    அப்ப கணவன் மாரை அடிக்கும் பெண்களுக்கு என்ன தண்டனை?எனக்கு கட்டாயம் தெரிய வேணும்.

  • அப்போ எங்கள் நாட்டு ராணுவத் தளபதிக்கு எத்தனை காலங்கள்? என்ன தண்டனை?

    • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

      செய்தியின் கடைசி பந்தியை வாசித்துபோட்டு ஒண்டும் எழுத கூடாது என்று இருந்தனான் (இணையத்திற்கும் இம்முகம் கொண்டிபூதி).
      நீங்கள் தொடங்கியதற்காக மட்டும்.
      அவன் பொல்லூண்டும்வயத்தில் தான் அந்த விடயங்கள் சர்வதேச நீதிமன்றத்தின் (ICC ) மேசைக்கு வரும்.
      UN செயலாளரும், ICC பிரதமரும் கொரி(ன்)யா மங்கியள் பொறுப்பில் இருக்கும் காலம்வரை இது நடக்குமோ என்பது எனக்கு சந்தேகம்.
      மேலும் குறிப்பிட்டவர் அனைவரும் புத்தரின் வழியில் வந்தவர்கள் – சர்வதேச சங்கங்களுக்குள் பொறுப்புகளில் இருந்துகொண்டு தமிழரை வைத்து கேலி விளையாட்டுக்கள் செய்த வண்ணம் இருக்கிறார்கள்.

      அந்த UN பங்கிமங்கி இருக்கும் பதவியில் தொடர்ந்து இருப்பதற்கு விரும்புவதாக எங்கோ வாசித்தேன். அதுவும் நடந்தால் உங்கள் எதிர்பார்ப்பை இன்னும் பல வருடங்களுக்கு தள்ளி வைப்பதே எங்கள் அனைவரின் ரத்தக்கொதிப்பை தவிக்க உதவும்.
      அல்லது உலகம் முழுவதும் இப்ப புரட்சிகள் கிளம்புகின்ற காலம் இது, நாம் தமிழரும் அதே உலகத்தில் தான் வாழ்கிறோம் என்று வைத்துக்கொண்டு அந்த புரட்சிகளும் எங்களுக்கும உதவலாம். பார்ப்போம் பொறுத்திருந்து….

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    பிசிமங்கிக்கு இப்ப தான் வயசு 74 ஆக்கும்?
    நல்ல எதிர்காலம் இருக்கு…

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்