உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்லிபியாவில் நேட்டோ படைகள் அதிபர் கடாபியின் வீட்டிற்கு அருகே தாக்குதல் நடத்தின.
அரசுப் படைகளும் பதிலுக்கு அதிருப்தியாளர்கள் தங்கியுள்ள நகரத்தின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன. லிபியாவை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் அதிபர் கடாபியை பதவி விலகக் கோரி அதிருப்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இவர்களை ஒடுக்க அரசுப் படைகள் விமான தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். இதையடுத்து அதிருப்தியாளர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நேட்டோ படைகள் கடாபிக்கு எதிராக களமிறங்கின.

தலைநகர் டிரிபோலியில் கடாபியின் மாளிகையையொட்டிய பகுதியில் நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தியதில் பயங்கர குண்டு சத்தமும், வானளாவிய புகை மண்டலமும் காணப்பட்டது. கடாபி ராணுவத் தளபதி வீட்டை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் உயிர் பலி குறித்த விவரம் ஏதும் தெரியவில்லை.

இதற்கிடையே கடாபி ராணுவப் படைகள் அதிருப்தியாளர்கள் அதிகமுள்ள அஜிதாபியான் நகரின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனால் லிபியாவில் முக்கிய நகரங்களில் உணவு, குடிநீர், மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதிபர் பதவியிலிருந்து கடாபி இறங்க மறுப்பதால் அந்நாட்டுக்கு எதிரான தாக்குதலை மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்க நேட்டோ படைகள் திட்டமிட்டுள்ளன. இதனிடையே பெங்காசி நகரில் கடாபிக்கு எதிரான அதிருப்தியாளர் தலைவர்களுடன் ரஷ்ய தூதர் பேச்சு நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்