உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



காஞ்சிபுரத்தை அடுத்த ஓச்சேரி அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்ததில், தீயில் கருகி 22 பேர் பலியாகினர். மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சென்னையிலிருந்து திருப்பூருக்கு நேற்று இரவு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 30 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இரவு 11.30 மணியளவில் பயணிகள் அனைவரும் ஆழ்ந்த தூக்கித்தில் இருந்தனர். காஞ்சிபுரத்தை அடுத்த காவேரிபாக்கம் அவலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற பேருந்து முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.

மோதிய வேகத்தில் பேருந்து, சாலையை ஒட்டியுள்ள 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தின் டீஸல் டேங்க் வெடித்ததில் பேருந்து முழுவதும் தீப்பிடிக்க தொடங்கியது. இரவு நேரம் என்பதால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் என்ன நடந்தது என்று சுதாரிப்பதற்குள் பேருந்து முழுவதும் மளமளவென தீ பரவியது. ஓம்னி பேருந்து என்பதாலும், இருந்த ஒரு கதவும் தாழிடப்பட்டு, ஜன்னல்களும் மூடபட்டிருந்ததால் பேருந்திலிருந்து பயணிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.தீ பரவி புகை மூட்டம் சூழ்ந்ததால் என்ன ஆனது என்றே தெரியாமல் பலரும் மயங்கினர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததை பார்த்த, மற்ற வாகனங்களும் சாலையில் நிறுத்தப்பட்டன. அதில் இருந்தவர்கள் பொலிஸ் மற்றும் அவசர ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துவிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீயின் தாக்கம் கடுமையாக இருந்ததால் பேருந்திற்குள் சிக்கியவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை. அதனால் மூன்று குழந்தைகள் உட்பட 22 பேர் உடல் கருகி பலியாகினர். 2 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து ஏற்பட்டவுடன் எச்சரிக்கை செய்து உரிய நடவடிக்கை எடுக்காததும், இரவு நேரம் என்பதாலும் இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என தெரிகிறது. இவ்விபத்தில் ஒட்டுமொத்தமாக 22 க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஓட்டுனர் நாகராஜன் உயிர் தப்பியுள்ளார். அவரிடம் வேலூர் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது.

சம்பவ இடத்திற்கு வேலூர் மாவட்ட கலெக்டர், ஐ.ஜ. ஆகியோர் நேரில் சென்று மீட்டு பணிகளை துரிதப்படுத்தினர். தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சின்னையாவும் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

பேருந்து கவிழ்ந்த விபத்தி்ல் பெரும்பாலானோர் உயிர் இழந்த நிலையில் சென்னையை சேர்ந்த ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அவர் பெயர் கார்த்திக்ராஜா. இவர் தனது மனைவி ஸ்மிதாவுடன் கடைசி இருக்கையி்ல அமர்ந்து பயணம் செய்துள்ளார். பேருந்து கவிழ்ந்தவுடன் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து தப்பியதாக கூறிய அவர் தனது மனைவியும் இவ்விபத்தில் பலியாகி விட்டதாக தெரிவித்தார். மேலும் பேருந்தின் ஓட்டுனரான சேலம் தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த நாகராஜன் பொலிசில் சரணடைந்துள்ளார்.

விபத்து எவ்வாறு நடந்தது என பொலிசில் சரணடைந்த ஓட்டுனர் நாகராஜன் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, பேருந்திற்கு முன்பு இடது புறமாக சென்ற வாகனம் எதிர்பாராத விதமாக வலது புறம் வந்தது. இதனால் விபத்தை தவிர்க்க திருப்பிய போது பேருந்து பள்ளத்தில் கவிந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்