உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பிரிட்டனில் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட நாற்பது இலங்கைத் தமிழ் அகதிகள் திருப்பியனுப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், நேற்றைய தினம் மொத்தமாக ஐம்பத்து நான்கு பேர் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

பிரிட்டனின் கெட்விக் விமான நிலையத்தில் இருந்து விசேட விமானமொன்றின் மூலமாக இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்ட அவர்களில், நாற்பத்தி எட்டு ஆண்களும் ஆறு பெண்களும் இருப்பதாக விமான நிலையத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததைத் தொட்ர்ந்து, விமான நிலைய நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், அவர்களின் ஆள் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் இலங்கை புலனாய்வுப் பிரிவினர் வசம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்