உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


11 Responses to “பிள்ளைகளிற்காய்”

 • விசு.க.விமலன்.:

  நல்ல பல கவிதைகள் இன்று நெறில் வந்துகொண்டிருக்கின்றன. பாராட்டுக்கள்.
  ஊரிலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் யாதவனையும், பகிதரனையும் தவிர புலம்பெயர் தேசங்களிலிருந்து காத்திரமான கவிச்சரங்களைக் காணமுடியவில்லை. எனக்குத் தெரிந்தவரை பலர் இருக்கின்றனர்.எதிர்பார்ப்போம் அவர்களின் ஆக்கங்களை.

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  இக்கவிதை என் குன்றிய தகுதிக்கு விளங்காமல் இருப்பது புதினமில்லை.
  ஆனால் சடக்கு பிடக்கு என்ற அடுக்குச்சொற்க்களில் தொடங்குவது பிடித்திருக்கிறது. அத்துடன் பகியண்ணையின் திருப்பமும் பிடித்திருக்கிறது.
  கொஞ்சநாளாய் கவிதைகளை படித்து படித்து கொஞ்சம் தெரிந்து வைத்திருந்த பிறமொழிகளையும் மறந்துபோனேன்.

  • பிற மொழியில் உனக்குள்ள ஞானத்தை கண்டு மலைத்தவன் நான் பிற மொழியில் உள்ள பாண்டியத்தை மறக்க முற்படாதை அது எங்களை எங்கோ அழைத்து செல்லும் .இல்லாவிடில் நாங்கள் கிணத்துக்குள் தவளைகள் .

   • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    நன்றி.
    தமிழ் படித்த காலங்கள் என்வாழ்க்கைப்பயணத்தில் 1/3 பங்கு. மிகுதிய 2/3 பங்கு பிறமொழிகளிலேயே. இதை நான் வேற விதத்தில் கூறினால்:- என்னைப்போல் பலர் வீட்டில் உலையேறுவதற்கு முக்கியகாரணிகளில் ஒன்று பிறமொழிகளே. இவற்றினை நான் இஷ்டப்பட்டாலும் மறக்கமுடியாது.
    தமிழை மறந்துவிடுவதற்க்கும் சந்தர்ப்பங்கள் அரிதே.

 • சச்சி:

  கட,மட,வட, சட,குட,என கவிதை {ட,வை மட்டும் மூல எழுத்தாக பயன் படுத்தி}போய்க்கொண்டேயிருக்கிறது.கடமை என்று சொல்லி பெற்றோர்கள்
  செய்த கைங்கரியங்கள் இவை, இதில் ஒரு நப்பாசை கூட அவர்களுக்கு இருந்திருக்கிறது,அதாவது தாங்கள் கடமையை (பிள்ளைகளுக்காக) சரியாக செய்துவிட்டோம் என்பது தான்.கால ஓட்டத்தை கணமேனும் யோசிக்காதவர்கள்.கால ஓட்டத்துக்கு முகம் கொடுத்து தப்பிப்பிளைத்தவர்கள் பிள்ளைகளே.கடமை என்று சொல்லி காலில் விலங்கு மாட்டிக்கொண்டவர்கள் பெற்றோர்களே.ஆகவே கவிதையில் பொருளே இல்லை.

  • நானும் ஒரு நாலுவரீல கவிதை எழுதிப் போட்டு ஆராவது நல்லாய் ஏதாவது கருத்து எழுதுவாங்களோ என்று எதிர் பார்த்துப்போட்டுத்தான் இருக்கிறன்.ஒருவரும் எழுதவில்லை.என்ர மனிசியோட கட்டிப்பிடிச்சு அழுதுபோட்டுத்தான் இதை எழுதுகிறன்.கருத்துப் பிச்சை கேட்கிற மாதிரி ஆக்கிட்டாங்களடா.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

   • அது சரி கெங்கா நீ என்ன அனைத்து அலுவல்களுக்கும் உன் அன்பு கிளியின் அனுமதியுடன் தான் நடை முறைப்படுத்துவியோ .உவளவயின்டை
    கதையை விட்டுவிட்டு உன் கவிதையை எடுத்து விடடா தம்பி .சரக்கு தரமாய் இருந்தால் தானாக விலை போகும் விளம்பரங்கள் இல்லாமல் .

    • சும்மா கேட்கிற மாதிரித்தான் கேட்போம்.ஆனால் நாங்கள் அவர்களின் கருத்தை காதிலே விழுத்துவதில்லை.என்னை நீங்கள் நம்பாவிட்டால் சச்சி, சுதர்ஷனைக் கேட்டுப் பாருங்கள்.அவர் பொய் ஒன்றும் சொல்லமாட்டார்கள்.

  • தம்பி சச்சிக்கு ஒரு பதில் மூன்று கட்டங்களாக . முதலாவது கட கட பட பட . இது கவிதைக்கு அழகு சேர்க்கும்சந்தங்கள் சச்சி . அழ பகீதரனின் ஆழ்ந்த கருத்துள்ள அர்த்தமுள்ள அழகு கவிதை .மேலோட்டமாக வாசிக்கும்போது அதில் ஆழ்ந்து அமுங்கியுள்ள அர்த்தங்களை புரிதல் கொஞ்சம் கடினமானதே. எனவே பொறுமையுடன் கவிதைக்குள் புகுந்து
   ஆழ்கடலில் மூச்சடக்கி முத்துக்குளிப்பதுபோல் சுழி ஓடி தேடுதல் ஒன்றை
   மேற்கொண்டால் அவனின் அற்புத கவியின் அர்த்தங்களை நீ உணர்ந்திடுவாய் .மூன்றாவது கவ்தையில் பொருளே இல்லை என்று கூறுவது ஏற்கமுடியாதது . நன்றி வணக்கம் மீண்டும் உலா வருவோம் .

 • vinothiny pathmanathan:

  என்ன இந்த மாதம் ஒரே கவிதை மழை பொழிகிறது . மழையில் நனைவதற்கு யாருக்குத்தான் பிடிக்காது .அதுவும் கவிமழை என்றால் எனக்குக் கொள்ளை பிரியம் ,நன்றி பகி அண்ணா .கவிதையை இணைத்தமைக்கு

  • வினோதினி சாந்தியில் நீ வாழ்ந்த வேளையில் சம்பில் மற்றும் மாதகல் பக்கத்திலுருந்து இடி மினல்களுடன் கூடிய அடை மழையை நீ அனுபவித்திருப்பாய் .அதே கொட்டும் மழை இங்கு இந்த இணையத்தில் பொழிய இருக்குதடி பிள்ளை .காத்திரு இன்னும் கொஞ்ச காலம் .

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்