Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக பான் கீ மூனை ஐ.நா பாதுகாப்புச் சபை இரண்டாவது தடவையாகவும் பரிந்துரை செய்துள்ளது.

நேற்று நியூயோர்க்கில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் கூடிய பாதுகாப்புச் சபை பான் கீ மூனை இரண்டாவது தடவையாகவும் தெரிவுசெய்துள்ளபோதும், இந்த பரிந்துரையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) கூடும் 192 நாடுகளின் பிரதிநிதிகளை கொண்ட ஐ.நாவின் பொதுச்சபை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீர்மானம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை (16) ஐ.நா பாதுகாப்புச்சபை கலந்துரையாடலை மேற்கொள்ளவிருந்தபோதும், கரீபியன் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் எதிர்ப்பால் அது வெள்ளிக்கிழமைக்கு பிற்போடப்பட்டுள்ளது.

எனினும் இந்த நாடுகளின் எதிர்ப்பை புறக்கணித்த பாதுகாப்புச்சபை மூனை தெரிவுசெய்துள்ளது.

67 வயதான தென்கொரியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான பான் கீ மூனின் இரண்டாவது பதவிக்காலத்தை கரீபியன் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் எதிர்த்து வருகின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்