உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


சீனாவில் குளோரின் வாயு கசிவால் பள்ளிக்குழந்தைகள் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் தென்மேற்கு பகுதியான குயிஸ்கோவ் மாகாணத்தில் உள்ள டைட்டானியம் தொழிற்சாலை உள்ளது.
இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய குளோரின் வாயு கசிவு காரணமாக அப்பகுதியில் படித்து வந்த குழந்தைகளுக்கு வயிற்று வலி மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டது. 

பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் அருகில் உள்ள மூன்று மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விசாரணையில் தொழிற்சாலையில் உள்ள கருவிகளின் பழுது காரணமாக வாயு கசிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்நிறுவனம் சுற்றுச்சூழல் துறை மூலம் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்