உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்வடமேற்கு ரஷ்யாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 44 பேர் பலியானார்கள். 8 பேர் காயம் அடைந்தனர் என அதிகாரிகள் கூறினர்.
கரேலியா குடியரசின் பெட்ரோவோட்ஸ்க் விமான நிலையத்தில் இருந்து(0.6 மைல்) ஒரு கிலோ மீற்றர் தொலைவில் மோட்டார் பாதையில் தரை இறங்க முயன்ற போது விமானம் தீ பிடித்து நொறுங்கியது.

விபத்துக்கு உள்ளான டியு-134 விமானம் “ரஷ் ஏர்” நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த விமானத்தில் 43 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்கள் இருந்தனர். விபத்தில் உயிர் பிழைத்த பயணிகளும் அபாய நிலையில் மருத்துவமனையில் உள்ளனர்.

விமானம் சாலையிலேயே மோதியதால் அருகாமை குடியிருப்புகள் தப்பின. சாலையில் உடல்கள் சிதறி கிடந்தன. நொறுங்கிய விமான பாகங்கள் இடையே தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் போராடினர்.

விபத்தில் ஸ்வீடனை சேர்ந்த நபர் ஒருவரும் இறந்து உள்ளார். நேற்று இரவு 11:40 மணி அளவில் விமான தொடர்பு துண்டிக்கப்பட்டு விபத்துக்கு ஆளானது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

ரஷ் ஏர் நிறுவனம் தனியாருக்கு சொந்தமானது. மாஸ்கோவில் தலைமையிடம் உள்ளது. மேற்கு ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் வாடகை விமானங்களை இயக்குவதில் மிகப் பிரபலமான நிறுவனம் இதுவாகும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்