உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்ஜப்பானில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஹோங்ஸூகூ மாகாணத்தில் 20 கி.மீ தொலைவில் ‌மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
வடக்கு ஜப்பானின் பசிபிக் பிராந்தியத்தில் 6.7 ரிக்டர் அளவில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் குறித்த தகவலை ஜப்பான் மற்றும் அமெரிக்க நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்தது.

நிலநடுக்கம் காரணமாக கடலோர நகரங்களான காமய்ஷி மற்றும் ஒபுனட்டோ பகுதிகளில் இருந்து 8 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஒரு மணி நேரத்தின் பின் அந்த எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.

நிலநடுக்கத்தால் ரயில் சேவை அந்தப் பகுதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் இயங்கத் துவங்கியது. ஜப்பான் நேரப்படி இன்று காலை 7 மணிக்கும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு வடகிழக்கே 53 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. கடந்த மார்ச் மாதம் 11ம் திகதி வடக்கு ஜப்பானில் 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் போது 23 ஆயிரம் மக்கள் இறந்தோ அல்லது மாயமாகியோ போனார்கள். புகுஷிமா அணு உலை பாதிக்கப்பட்டு கதிர்வீச்சு பரவியும் பாதிப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்