உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்டொரன்டோ நகர வாசிகள் கிட்டத்தட்ட காட்டுமிராண்டிகளைப் போன்றவர்கள் என்று வர்ணித்திருக்கின்றார் மனிதப் பழக்க வழக்கங்கள் பற்றி ஆராயும் நிபுணர் லிண்டா அலன்.
வீதிப் போக்குவரத்து விதிகள் சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. சைக்கிளில் செல்பவர்கள் கூட தங்களுக்கான விதிமுறைகளைப் பேணி நடப்பதில்லை.

வரிசையாக நின்று காரியங்களை முடிக்க வேண்டிய இடத்தில் அந்த ஒழுங்கு பின்பற்றப்படுவதில்லை. ஒரு கட்டிடத்தில் கதவைத் திறந்து கொண்டு பிரவேசிக்கின்ற போது அடுத்து வருபவரைப் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை.

லிப்ட்டுகளுக்குள் பிரவேசிக்கும் போது மற்றவர்களைத் தள்ளிக் கொண்டு செல்வது. சமூக ஒழுங்கு என்பது மிகவும் அருகிப் போய்விட்டது. நாகரிகம் அடைந்த சமூகம் என்று கூறிக் கொள்கின்றோம். நவீன கார்களையும், உபகரணங்களையும் பாவிக்கின்றோம்.

வானுயர் கட்டிடங்கள் எழுகின்றன. ஆனால் அடிப்படை பண்பு அற்றுப் போய்விட்டது. டொரன்டோ ஒரு நகரக் காடு. திரும்பிய பக்கம் எல்லாம் அங்கு மிருகங்களின் நடமாட்டம் தான் தென்படுகின்றது. மனிதர்கள் தங்களது தனிப்பட்ட நலன்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கின்றனர்.

அதற்காக பொது நலன்களை பலியிடுவதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதும் இல்லை. கடந்த ஒரு சில ஆண்டுகளில் இந்த நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது என்று நீண்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார் லிண்டா அலன்.

டொரன்டோவின் சனத் தொகையும் அதிகரித்து வருகின்ற நிலையில் பழக்க வழக்கப் பிரச்சினையை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை படிப்படியாக முன்னெடுக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஒருவகையான மன அழுத்தங்களும், அவசரப் போக்குமே இந்த நிலைக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

12 Responses to “டொரன்டோ ஒரு நகரக் காடு: வர்ணித்திருக்கின்றார் நிபுணர் லிண்டா அலன்,”

 • புனைப்பெயர் பொன்ராசு:

  உந்த லிண்டாவுக்கு எங்களைப்போல வெளிநாட்டுக்காரரில பொறாமை ஒண்டுமில்லாமல் வந்து நல்ல காருகள், பெரிய வீடுகள், கன தமிழ் கடையள் என்றெல்லாம் வைச்சு நாங்கள் சுதந்திரமாய் இங்க இருக்கிறோம் எண்டு.
  போன கிழமை கலியான வீட்டில நல்லா முட்ட சாப்பிட்டு விட்டு ரிரிசி ல திரும்பி வரேக்க சுதந்திரமாய் ஏவறை விட்டனான். வசுவில பக்கத்து சீட்டில இருந்த வெள்ளை ஒண்டு ஏதோ சுசிபுசு எண்டெல்லாம் இங்கிலீசில வினைஞ்சுபோட்டு எழும்பி போட்டுது.
  பொழுது போகலே எண்டு மிலிக்கன் பார்க்கில இருந்து மூக்குக்க அரியிது எண்டு மூக்குக்க விரலை விட்டு துடைச்சனான். காஞ்ச சளியை கையில சீறிப்போட்டு அதை இருந்த வாங்கில துடைக்க பக்கத்தில போன விசர் வெள்ளை ஏதோ என்ன மிருகங்களை பார்க்கிற மாதிரி பார்த்திட்டு போனது.
  ரிம் ஹோர்டனில இருந்து பசிக்கெண்டு டோனட்ஸ் வாங்கி ஊரில தேத்தண்ணிக்கடையில் டீயும் வடையும் ருசிச்சு சாப்பிட்டது போல சாப்பிட்டு கொண்டு இருக்கேக்க அங்க வேலை செய்யிற ஒரு தமிழ் பெட்டை வந்து ஐயா இங்க மற்றவையளும் சாப்பிட வாறவை பொச்சடிச்சு பொச்சடிச்சு சாப்பிட வேண்டாம் எண்டு பேசுது. கன்னத்தில டோனட்சிட சொக்குலட் பிரண்டு கிடக்கு துடையுங்கோ எண்டு சொல்லி துண்டும் எடுத்து தந்திட்டு போனது.
  இரா சுப்பர் மார்க்கற்றில இரசத்திற்கு உள்ளி ஒருக்கா கெதியில போய் வாங்கிக்கொண்டு வருவோம் எண்டால். காசு குடுக்கேக்க லைனில நிண்டதுகள் பேசிப்போட்டுதுகள் தாங்கள் என்ன கன நேரம் லைனில நிக்கிறோம் எண்டு.
  பாங்கிக்க செக்கு மாத்த போனால்போல பீடி ஒண்டை பத்திப்போட்டு உள்ளுக்கு போற வாசலில இருக்கிற பாங்கு சுவரில பீடியை நூர்த்துப்போட்டு பீடித்துண்டை கீழ போட பாங்குக்காரி வந்து என்னை கிழிச்சுப்போட்டு செக்கையும் மாத்தி தரேல அண்டைக்கு.
  நோ ப்ரில்சில கோலி ப்ளவர் நல்லா இருக்கோ எண்டு பார்க்க ஒரு பத்து பதினஞ்சிண்ட இலையல இழுத்து பார்த்துவிட்டு ஒண்டும் சரியில்லை எண்டு விட்டுவிட்டு வர சுப்பர் மார்கட்டில வேலை செய்யிற ஒருத்தன் வந்து நான் கை வைச்ச கோலி ப்ளவருகளை கட்டாயம் வாங்கிக்கொண்டு தான் போகவேணும் எண்டு ஒற்றைக்காலில நிண்டான் பாவி. பிறகென்ன கோழி வாங்க கடைக்கு போனனான், அந்த மாதம் முழுக்க வீட்டில கோலி ப்ளவரிலதான் குழம்புக்கறி.
  நாங்கள் இங்க சுதந்திரமாய் இருக்கிறது பிடிக்காட்டி வெள்ளையள் வின்னிபெக், மொன்றியால், வான் கூவர் வழிய போய் இருக்க வேண்டியது தானே. இங்கின இருந்து இடைஞ்சலாய் எங்களை ஒண்டும் செய்ய விடாமல்.

  • பொன்ராசு முதல்லை போய் நல்லா முழுகடா.நாத்தம் என்னால தாங்க முடியாமல் இருக்கு.ஏவறை எந்தப்பக்கத்தால விட்டனி.நல்ல காலம் பஸ்ற்குள்ள ஒருத்தரும் மண்டையப் போடல.நீ எதைத் தொட்டாலும் அதில கட்டாயம் கிருமி இருக்கும்.வெளியில திரியாதை உன்னை வச்சு எங்களை தப்பாய் இடை போடுறாங்கள். கலியாணம் கிலியாணம் செய்து போடாதை.பேந்து வாற பெட்டையும் பாவம்.

   • புனைப்பெயர் பொன்ராசு:

    மாதத்தில ஒருக்காதான் முழுக்கு, மிச்ச நாள் டாலறாமா செண்டு அடிச்சுப்போட்டு திரியிறனான்.
    வசுவில பக்கத்தில இருந்த வெள்ளைக்காரியிண்ட வாய் நாத்தம் தாங்கேலாமல் தான் எனக்கு முட்ட சாப்பிட்டது ஏவறையாய் வந்ததப்பு.
    என்னப்பெத்த ராசா ஆளவந்தானே வேம்பிலையில செய்த கிரீம் உடம்பு முழுக்க பூசிறனான். கிருமியள் வலு சுலபமாய் எனக்கு கிட்ட நெருங்காது வெய்யே. எனக்கு மூண்டுதரம் கலியாணம் ஆயிட்டடாப்பு மூண்டுதாரமும் முழுகாமல்தான் டாலறாமா செண்டோடையும் வேம்பிலை கிரீமோட இருக்குதுகள். ஊரில 30 பரப்பு வேப்பம்தோப்புதான் சீதனம்.

  • புனை பெயர் பொன்றாசுவிண்டை பேரிலையே பல அர்த்தங்கள்.பொன் என்றால் பவுன் இஞ்சை பவுன் இப்ப எக்கச்சக்கமான விலை
   ஒரு தங்கப்பவுனை அடைவுக்கு கொண்டுபோனாலே நாப்பத்தோராய்ரம் தாறாங்கள் .அப்ப வேண்டுகிற விலை எவ்வளவாய் இருக்குமெண்டு
   விளங்கும் தானே (உங்களுக்கெல்லாம் உது சிம்பிள் )நான் கலியாணம் கட்டேக்கை வெறும் எட்டு நூறுகள் .அப்பு ஆச்சியை கட்டேக்க பத்து ரூவாய்.
   அப்ப பத்து ரூவாய்க்கு சொல்லுறது ஒரு பவுன் எண்டு .பொன் ராசா நீ பவுனை போல ஒரு ஆள் .அடுத்தது உன்றை பேரிலை இருக்கிற ராசா .ராசா என்பவன் ஒரு நாட்டையே ஆளும் மன்னன் .உன்றை கருத்துக்களை நோக்கினால் நீ மன்னனடா.உள்ளதை உள்ளபடி சொன்னாய்.
   சிலர் சொல்லுவினம் உவருக்கு என்ன தெரியும் உங்க இருந்து கொண்டு சும்மா வெட்டிப்பேச்சு அளக்கிறார் என்று .எங்களிட்டையும் ஒரு பூதக்கண்ணாடி ஒன்று உள்ளது .நாங்கள் இஞ்சை இருந்துகொண்டு திண்ணைபெச்சு பேசவில்லை .நீங்கள் உங்கு என்னசெய்கிறீர்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதை முற்றிலும் அறியாவிட்டாலும் ஓரளவாவது அறிவோம் .உள்ளதை சொன்னால் உடம்பெல்லாம் புண்ணாகுது ஆளவந்தானுக்கு .நீ சொன்ன அத்தனை விடயங்களுக்கும் சமனானதும் சமாந்தரமானதுமான எத்தனையோ விடயங்கள் நீங்கள் உங்கினை போறத்துக்கு முன்னமே இஞ்சையும் ஆண்டாண்டு காலமாக நடக்கும் விடயங்கள் .ஏதோ சீனநிலை மட்டும் பழியை போட்டுவிட்டு நீங்கள் செய்யிற
   எல்லாத்தையும் நியாயப்படுத்த முயல வேண்டாம் .நான் சும்மா சொல்லேல்லை .எனக்கு எல்லாம் தெரியும் எண்டு நினைக்கிறான் எண்ட மாதிரி
   நாளைக்கு வருவினம் கனபேர். நான் இந்த பூமி பந்தில் முப்பத்திரண்டு நாடுகளில் கால் பதித்து பெற்ற அனுபவத்தினூடாகவே இதை சொல்லுகிறேன் .பொன்ராசாவின் கருத்துக்கு எதிர் கருத்து சொல்ல,சமாளிக்க எத்தனையோ பேர் முயன்றாலும் யதார்த்தங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பாவம் அவசியமானது .உண்மைகள் கசப்பானவையே .எங்கை போனாலும் என்ரை அலுவல் முடிஞ்சா சரி எண்டு நினைக்கிற சனம் .அடுத்தவன் எக்கேடு கேட்டாலும் நோ problem எண்டு நினைக்கும் நம்மவர் .ஒன்றொன்றாக சொல்கிறேன்.பொன்ராசாவின் கோலிப்பிலோவேர
   மாதிரி கதை ஒன்று .இருபத்தைந்து வருடங்களுக்கு முன் கொழும்பு மீன் சந்தையில் என் நண்பனொருவனுடன் மீன் வாங்க போனேன் .அவன் மீனை பிரட்டி பிரட்டி அமத்தி பாக்கிறது ,பின் பூவை தடவிபாக்கிறது பிறகு வைக்கிறது .மீன் யாவரி சொன்னான் நீ என்ன மீன் வாங்க வந்தனியோ இல்லாட்டில் மீனை கலியாணம் கட்ட வந்தனியோ எண்டு சொல்லி உனக்கு நான் மீன் விக்கமாட்டேன் என்றான் .அண்மையில் இளைப்பாறிய
   அரச உயர் அதிகாரியுடனான உரை யாடலில் அவர் சொன்னார் தன் நண்பன் ஒருவனின் அழைப்பில் வெளிநாடொன்று போனதாகவும் ,நண்பன் தன் வெளிநாட்டு அனுபவங்களை கூறும் பொது சொன்ன விடயம் .நண்பன் வாகன ஓட்டுதலுக்கான அனுமதி பத்திரத்துக்கு நான்கு ஐந்து தடவை போயும் சரிவராமல் கடைசியில் கையுக்க ஏதாவது பொத்த முயற்சித்தாராம்.அவன் சொன்னானாம் உதய் வாங்கிகொண்டு நாப்பது ஐம்பது பேரை
   கொல்லுகிரதுக்கு உனக்கு அனுமதி தர நான் தயாரில்லை என்று.இஞ்சை கொழும்பு கோட்டையில் இருந்து எத்தனயோ ரயில்கள் ஓடும் .எங்கட அந்த நாளில்லை ஓடின அந்த யாழ் தேவி ,உத்தர தேவி ,இரவு தபால் ரயிலிலை டெய்லி சீட் சண்டை .சீற்றும் வேணும் அதிலை கோனர் சீற்றும் வேணும் .நீங்கள் உங்கினை போறத்துக்கு முதல் மத்திய கிழக்கு நாடு பயணங்கள் .தொடக்கத்தில் ஏஜென்சி காரர் ஐஞ்சு சத காசும் வேண்டாமல் அனுப்பின காலம் ஒண்டு .அப்ப சவூதி ரியால் நாலு ரூவாய் .ஐஞ்சு பேரை அனுப்புகிரதுக்கு இருந்தால் சப் ஏஜென்சி காரர் சேர்ந்து ஐம்பது பேரிட்டை காசை வாங்கி இருப்பினம் .அப்ப ரேட் மூவாயிரம் எண்டால் எங்கடை ஆள் மெல்ல ரகசியமாய் போய் நான் மூவாயிரத்து ஐநூறு தாரன் என்ரை ஆளை தட்டிவிடு எண்ணுவான் .உப்பிடி உப்பிடி கூட்டிக்கொண்டு வந்து கடைசியிலை 350 ரியால் சம்பளத்துக்கு (ஆரம்பத்திலை ஒரு
   தொழிலாளிக்கு 1000 ரியாலுக்கு குறையாத சம்பளம் .நம் ஊர் காரர் அந்த சம்பளம் பெற்றவர் இன்னும் உயிருடன் உள்ளனர் ) ஒரு லச்சத்துக்கும்
   மேல் ஏஜென்சி இக்கு அள்ளிக்கொடுக்கும் நிலைமைக்கு கொண்டு வந்தோம் .அமளியாக பிரச்சனை நடந்த வேளை ஏதோ பிள்ளையளின் உயிரை காவந்து பண்ணவேண்டு மென்று சவூதி பக்கம் போன சனம் ஏராளம்.எழுத ஏராளம் உண்டு தூக்கம் கண்களை தலுவுகின்றதால் இன்னொரு தளத்தில் வருகிறேன் எங்களின் அடிப்படை மனோபாவத்தில் மாற்றம் ஏற்படும் வரை உந்த முக சுளிப்புகள் , ,காறித்துப்பல்கள்,கஸு,குசு கஸு குசு எண்ட இங்கிலீசு பேச்சுக்கள் , காறாப்பித்துப்பல்,மற்றும் உவளின்றை உந்த டொரோண்டோ காடாகின கதைகள் வரத்தான் செயும்

   • புனைப்பெயர் பொன்ராசு:

    உங்கடை நண்பன் பிறகென்ன மீன் சாப்பிடாதவரையே
    கலியாணம் செய்தவர்?
    என்னை நோ ப்ரில்சுக்குள்ள இப்ப விடிறேல.

 • கவிதா:

  இதில் கூற பட்ட விடயம் 100 % உன்மை அடுத்தவன் எக்கேடு கெட்டு போனால் என்ன என்டு கொன்டு தான் சனம் இங்க வாழுகுது .. நான் 19 வயதில வெளிநாடு வெளிக்கிட்டு ஐரோப்பவில் இருந்தேன் ஒரு நாட்டில கூட நான் இப்படி பார்க்க வில்லை … மறுப்பதற்கு எதுகும் இல்லை எல்லமே உன்மை.. சென்ற வருடம் 6 மாதம் 16 சாவு 15 நாட்களில் நடைபெற்ரது இந்த பாளானா ரொரொன்டோவில தான் .. இந்த சனம் செத்தது எல்லம் வாகன விபத்தில தான் இன்க இருகிர ஆக்கள் வீடுகளை வேன்டி போடு அதுக்கு காசு கட்ட வேலை வேலை என்டு திரிகிரதுகள் வீடுகளில இருக்கிரது இல்ல அதுகலூக்கு என்க தெரியும் இதுகலை பர்ரி .. நிலதுக்கு கிளதான் சமையல் .. வீட்டு கிச்சனில சமயல் இல்லை அது பழதாகி போகுமாம்

  • பிடிக்கலை என சொல்ல காரணம் ஆயிரம் இருக்கும் ஆனால் உங்கள் மென்மையான மனசு எனக்கு விளங்குகிறது.ஏன் உங்களால் சுகமான வாழ்க்கையை தெரிவு செய்ய முடியாதா?அழிக்கப்படும் வாழ்வுக்கு ஏன்தானோ இவ்வளவு கஷ்ரங்கள்? அழிவது தெரிந்தும் மனம் அலைபாயுதே, பொறை ஏறி சாகிற அளவுக்கு மனம் அலையுதே! முடிவு சாவுதானா?

  • புனைப்பெயர் பொன்ராசு:

   நீர் ஐரோப்பாவில புதிசா வந்து இறங்கேக்க எல்லாம் சுத்தமாய் தான் இருந்திருக்கும். டொரோண்டோவிக்கு வந்து தமிழர் கனபேர் இருக்கிறது உமக்கு எல்லாம் கெதியில அறியிறதுக்கு உதவியாய் இருந்தது. நானும் ஐரோப்பாவில நரக நகரங்களுக்கும் போயிருக்கிறன். நீர் இருந்தது ஒரு காற்று வீசிற வடிவான இடத்தில. அங்க தமிழருக்கு பதிலா வேற நாட்டுக்காரர் குப்பைவேலை செய்யிறதை கண்டிருப்பீர்.

 • Donmills DADA:

  சீனச்சமுகத்தினரிடம் இருக்கும் சில பண்பாடுகள் எங்களிடமும் இருக்கின்றதை நாம் மறுக்கமுடியாது. பெரும்பான்மையானவர்கள் சீனர்களே என்றும் எம்மில் குற்றவுணர்வு இல்லாமல் தப்பித்து கொள்ள முடியாது.
  நான் லிண்டா ஆலனின் ஆய்வை வாசித்திருந்தேன் அதில் எந்த சமூகத்தினர், எந்த நாடுகளை சேர்ந்த்தவர்கள் என்று பாகுபடுத்தப்படவில்லை.
  எங்கள் முதுகிலும் எச்சம் இருப்பதை நாமும் உணர வேண்டும்.
  D to the A to the D to the A DADA – Donmills DADA

 • லிண்டா அலன் எங்கேயோ மாறிப் போய்விட்டு.நல் ஒழுக்கத்துடன் நல்லவர்கள் வாழும் எங்கள் திரு நாட்டை குறை கூறுகிறார்.குறுக்கால போவாளே எங்களைப் பற்றி தரக்குறைவாகச் சொன்ன உன்ர நாக்கு அழுகவேணும்.நீ நாசமாய் போவாயடி.

 • விசு.க.விமலன்.:

  மேற்கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களில் ஓரளவு உண்மை இருக்கின்றது. இவ் விடையத்தில் முக்கியமாகச் சீனச்சமூகத்தினரே பெரும்பாலும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய அளவில் உள்ளார்கள். எமது சமூகத்தில் புதிதாக கனடா வந்தவர்களிடம் ஒரு சில ஆண்டுகள் இதுபோன்ற நடவடிக்கைகள் தென்பட்டாலும் கால ஓட்டத்தில் அவர்களின் பிள்ளைகளினாலோ அன்றி நண்பர்களினாலோ நல்வழிப்படுத்தப்படுகின்றார்கள்.
  லிண்டா அலன் அவர்களின் கருத்து கனடாவில் உள்ள பல ஊடகங்களில் கருத்துக் கணிப்பிற்காக வெளியிடப்பட்டிருந்தன. எனது காரியாலய கட்டிடத்தில் கணிசமான சீன இனத்தினர் இளம் வயதினர் மிக உயர் பதவிகளுடன் வேலை செய்பவர்களாக இருந்தும் லிப்டுகளில் மூடிக்கொண்டிருக்கும் சமயங்களில் கையை ஊடுறுத்தி திறக்கவைப்பது, இறங்கும்போது அருகில் நிற்பவர்களைப் பொருட்படுத்தாது தள்ளிவிட்டு வெளியேறுவது, ரெயினில் இடம்பிடிப்பதற்காக கதவு திறந்தவுடனேயே பாய்ந்து செல்வது, கடைகளில் ஒருவர் ஒரு பொருளைப் பார்வையிட்டுக்கொண்டிருக்கும் வேளை இடையில் பாய்ந்து தானும் அதே பொருளை எடுப்பது போன்ற பல உதாரணங்களைக் கூறலாம். இவை அனைத்துக்கும் மேலாக இவர்கள் எந்தவித மன்னிப்பையும் கோரமாட்டார்கள். அத்துடன் எங்காவது ஏடாகூடமாக மாட்டிக்கொண்டால் தங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பது போல் மளுப்பிவிடுவார்கள்.

  ஒருவகையான மன அழுத்தங்களும், அவசரப் போக்குமே என்ற காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக இருப்பினும் சமூகக் கட்டமைப்பும் ஒரு முக்கிய காரணியாக்க் கூறலாம்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்