உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


பணமா பாசமா என்ற தலைப்பில் வெளிவந்த இந்த கட்டுரைக்கு தங்கள் ஆத்மார்த்தமான
கருத்துக்களை வழங்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் பனிப்புலம் .நெற் இணையத்தின்
சார்பாக அன்பான நன்றிகள் .இதில் ஒரு விடயத்தை எடுத்துப் பார்ப்போமானால்,
அநேகமானவர்களின் கருத்து பணம் என்பதாகவே அமைகின்றது .இன்றைய உலகின் யதார்த்த்தத்தை
எடுத்துப் பார்ப்போமானால் அந்த முடிவையே நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக
இருக்கின்றோம். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று கூறியது உண்மையாக
இருந்தாலும் ,இப்போ பணம் உள்ளவனுக்கே சென்ற இடமெல்லாம் சிறப்புக் கிடைக்கிறது என்ற
விவாதமும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே .தொல்காப்பியன் அவர்கள் மிக அருமையாகச்
சொல்லியிருந்தார் .

பணம் .உள்ளவர்களிடம் .பாசம் .இல்லை
பாசம் .உள்ளவர்களிடம் .பணம் .இல்லை
இது தான் உண்மை.

திரு மனோகரன் ஐயா கூட தலையங்கத்திலிருந்து சற்று விலகி நின்று நம் ஊர் மேம்பட நல்ல
எண்ணம் ஒன்றையும் வெளிப்படுத்தியிருந்தார்.அதாவது கணினி வாங்குதல் ,அல்லது
கைத்தொழில் துறையில் நம் சிறார்களுக்கு வழிகாட்டி அதன் மூலம் சுயதொழில்
வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல் .இது கூட மிகவும் நல்ல சிந்தனை தான். .

இது போல பாலகுமார் அண்ணர் கூட நட்பு பற்றி அருமையாக தனது எண்ணத்தை
வெளிப்படுத்தியிருந்தார்..
நான் கூட முதலில் பணமா பாசமா நட்பா என்று தான் இந்த தலைப்பை தெரிவு செய்திருந்தேன்.
ஆனால் எல்லோரும் நட்பு என்றே கருத்துக் கூற முற்படுவீர்கள் என்பதாலேயே அதனை
தவிர்த்திருந்தேன்

எனவே அருமையான தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி இந்த கருத்துக்களத்தை
சிறப்பித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் அன்பான நன்றிகள் இதே போல் தொடரும்
கருத்துக்களங்களிலும் உங்கள் மேம்பட்ட கருத்துக்களை வழங்கி சிறப்பிப்பீர்கள் என்ற
நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன். நன்றி .வினோதினி பத்மநாதன்

One Response to “கருத்துக்களம்”

  • வினோதினிக்கு அவ்வளவு வயதிருக்காது என்று நினைக்கிறேன் .ஆனால் வயதுக்குமீறிய அறிவாற்றல் பொறி பறக்குது .இது வெறும் தனி நபர் புகழ் பாடல் என்று நினைக்கவேண்டாம் .எவ்வளவோ சிரமப்பட்டு அவரின் பெற்றோரின் தொலை பேசி இலக்கத்தை பெற்று அவர்களுக்கு அவர்தம் பிள்ளையின் ஆற்றலை பற்றி உரையாடினேன் .எனக்கு உன் வாழ்த்துக்கள் .

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்