உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பிரான்சில் உயிருக்கு அபாயம் விளைவிக்கும் இ.கோலி பக்டீரியா பரவி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த இ.கோலி பக்டீரியா பிரிட்டன் நிறுவனம் மூலமாக வந்துள்ளது என பிரான்ஸ் கூறிய நிலையில் பிரிட்டன் உணவு தர முகமை(எப்.எஸ்.ஏ) புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

பீன்ஸ் காய்கறியை பச்சையாக சாப்பிட வேண்டாம். காய்கறியை நன்றாக வேக வைத்தே சாப்பிடவும் என அறிவுறுத்தி உள்ளது. பிரான்சின் போர்டெக்ஸ் மருத்துவமனையில் இ.கோலி பக்டீரியா பாதிப்புக்கு உள்ளான 78 வயது பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. பாதிப்புக்கு உள்ளான பெண் மிக மோசமான நிலையில் உள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பிரிட்டனின் நிறுவனமான தாம்சன் மற்றும் மார்கன் மூலமாக பெறப்பட்ட காய்கறியால் இ.கோலி பாதிப்பு ஏற்பட்டது என பிரான்ஸ் தெரிவித்து உள்ளது. இ.கோலி பாதிப்பு பிரிட்டனில் இல்லை. இருப்பினும் இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி வழியாக ஐரோப்பிய சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இ.கோலி பக்டீரியா எதன் மூலம் பரவி உள்ளது என கண்டறிய விவாதிக்கப்பட்டது.

பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் சேவியர் பெர்ட்ராண்ட் கூறுகையில்,”சந்தேகத்துக்குரிய காய்கறியை தவிர்க்கவும்” என்றார். வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக அவதிப்படுவோர் உடனடியாக மருத்துவமனைக்கு வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்