உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்டென்மார்க்கின் சூப்பர் வைத்தியசாலைக்கான வரைபடம் இன்று வெளியானது. மொத்தம் 6.3 மில்லியாட் குறோணர்களில் எதிர்வரும் 2018ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும். ஊதின்ச நகரத்தில் உள்ள பல்கலைக்கழக வைத்தியசாலையும், வைத்தியசாலையும் இணைந்து சுமார் 275.000 சதுர மீட்டர் பரப்பளவில் விஸ்த்தரிக்கப்படவுள்ளது. ஏறத்தாழ ஒரு நகரமே வைத்தியசாலையாக மாறும் காட்சியை இந்த வரைபடம் விளக்குகிறது. கட்டி முடித்ததும் டென்மார்க்கின் பாரிய வைத்தியசாலையாக இது மாற்றமடையும். வைத்தியசாலைகளுக்கு இடையேயான உலங்குவானூர்தி சேவை, விசேட இணைய கேபிள், உலகப்புகழ் பெற்ற வைத்தியர்களை இணைத்த சத்திரசிகிச்சையென அமோகமான மாற்றங்கள் வரவுள்ளன. டென்மார்க் ஸ்ரோவ பெல்ற் பாலத்தை அமைத்த செலவில் மூன்றில் ஒரு பங்கு செலவில் இது அமைக்கப்படுகிறது. இதற்கான புதிய பாதைகளும் போடப்படுகின்றன. ட்ராம் சேவையும் வரவுள்ளது.

இதுவரை காலமும் பாராளுமன்றமே உலகை ஆளும் தலைமை இடமாக இருந்தது. அதையடுத்து மாநகர சபைகளே அதிகார உச்சமாக இருந்தது. அதையெல்லாம் தவிர்த்து ஐந்து மாபெரும் பாகாசுர வைத்தியசாலைகளை அமைத்து ஐந்து வைத்தியசாலை பிரிவுகளாக டென்மார்க்கைப் பிரித்து நிர்வாகம் நடாத்தவுள்ளார்கள். இத்தகைய முறைமை முழு உலகத்திற்குமே புதுமையான காரியமாகும். ஆரோக்கிய வாழ்வே மனிதனை ஆட்சி செய்யும் அதிகாரம் என்ற தோரணையில் டென்மார்க் எடுத்துள்ள புதிய அடி உலக சமுதாயத்திற்கு மிகச்சிறந்த முன்மாதிரியாகும்.

4 Responses to “டென்மார்க்கின் மிகப்பிரமாண்டமான வைத்தியசாலை இன்று அறிமுகம்”

 • pann T.BALA:

  நீங்கள் கூறிய ஊதின்ச நகரம் டென்மார்க்கில் எங்கு இருக்கிறது.உங்களது செய்திகள் எழுத்தின் பிழைகளை நன்கு கவனம் எடுக்கவும். பண் த.பாலா

  • குஞ்சங்கலட்டி குஞ்சாச்சி:

   எண்ட குமாரா, இது டென்மார்க்கில நடுச்செண்டரில இருக்கிற ஊரெழு இல்லை ஒட்டிசுட்டான். Odense

 • குஞ்சங்கலட்டி குஞ்சாச்சி:

  அதுவரை உயிரோடு இருந்தோம் என்றால் நிச்சயமாக குணப்படுத்தலாம்.
  2017 இல் மொனாக்கோ நாட்டில் 275.001 சதுர மீட்டரில ஒன்று கட்டி முடித்துபோடுவார்கள்.

 • அப்ப எனி உங்களிட்டை இருக்கின்ற அரை குறை வருத்தங்கள் எல்லாவற்றையும் மாத்தலாம்.
  யூ ஆ லக்கி பீப்பில்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்