Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்******முடிவுரை இணைக்கப்பட்டுள்ளது*****

16 Responses to “கருத்துக்களம் 4”

 • அன்பார்ந்த உறவுகளே
  கருத்துக்களம் 4 இல் பலரும் பல நல்ல கருத்துக்களை எழுதியுள்ளீர்கள்
  அன்பார்ந்த உறவுகளே தயவு செய்து மன்னிக்கவும். கருத்துக்களம் 4 இற்கு தொகுப்பு எழுதும் மனனிலையில் நான் இல்லை.
  இணையத்தினுள் புகுந்ததும் நல்ல நண்பனாக நல்ல சமூகசேவகனாக ஓர் நல்ல வாசகனாக இவ் இணையத்தினுள் வலம் வந்த ஓர் உயர்ந்த உள்ளத்தை இளந்த துக்கம் நின்று நிதானித்து செயல்பட மறுக்கிறது இணையத்தில் இருந்தால் வார்த்தைகள் வரவில்லை என்னால் மேற்கொண்டு எழுதவும் முடியவில்லை
  இந்தத் தலைப்புடன் மீண்டும் ஓர்முறை தங்களை சந்திக்கும் வரை நண்பன் சங்கர் அவர்களின் இழப்பு சம்பந்தப்பட்ட ஓர் புதிய தலைப்போடு கருத்துக்களம் 5 நுழைவோம்
  அன்புடன்.
  நா.சிவாஸ்.

 • வணக்கம்
  ஒரு பிள்ளையின் வளர்ச்சிக்கு முதன்மையன காரணியாகத் திகழ்பவர் யார்? என்று கேட்கும் கருத்துக் களம் நன்றாகவே இருக்கின்றது. ஒரு பிள்ளையின் வளர்ச்சியில் முதலில் கருவறையில்; தாய் முதன்மையிடம் பெறுகின்றார். பிள்ளை பிறந்தவுடன் தாயோடு தந்தையும் உறவுகளும் மற்றும் சமூகமும் பிள்ளையின் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ளுகின்றது. எது எவ்வாறிருப்பினும் பிள்ளையின் வளர்ச்சியில் தாய் தான் முதலிடம் என்ற கருத்து நிலை வாதம் முன்னிலையில் நிற்கின்றது. ‘எந்தக் குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல பிள்ளை தான் அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினில் என்ற கருத்தின் பின்னணியில் ஆணாதிக்கத்தின் தாக்கமும் இருப்பதாகத் தெரிகின்றது. பிள்ளை நல்லவானாக வளர்ந்துவிட்டால் தந்தையாரைப் போற்றும் சமூகம் தவறான செயல்ப்பாடுகளுக்கு தாயைப் பொறுப்புக் கூறுவதைக் கவனித்தால் நீங்கள் புரிந்து கொள்ளலாம். எனினும் பிள்ளையின் வளர்ச்சிக்கு பல நூறு காரணிகளைக் கூறலாம். முதலில் பெற்றோர் ஆசான் போன்றோhக்கும் அப்பால் பிள்ளையின் சிந்திக்கும் திறன் பிள்ளையின் உலகம் பற்றிய பார்வை என்பதும் முதன்மையானது. அதற்கான காரணிகளை ஏற்படுத்தவேண்டியவர்கள் பெற்றோர்களும் சமூகமும் தான் என்பது எனது கருத்து. இன்றைய சூழலில் வளர்ந்து வரும் தொழில் நுட்பம், வளர்ந்து வரும் நவீன வசதிகளுடன் கூடிய வாழ்க்கையையும் குறிப்பிடலாம். பிள்ளைகள் தங்களுடைய நேரத்தை பெறுமதியக எப்படிச் செலவு செய்கின்றார்கள் என்பது முதன்மையான இடத்தைப் பெறுகின்றது. வீட்டுச் சூழல் பெற்றோர் உறவும் முதன்மையான விடயமாகப்பார்க்கவேண்டும்.
  வேந்தன்

 • T,BALAKUMAR www.panncom.net:

  இந்தக்கருத்துக்களம் பற்றி ஒரு சிறு வினா புலம் என்ற பதத்தை தவிர்த்து பொதுவான கேள்வியாக வைத்திருக்கலாமோ என நினைத்தேன். இருந்தும் இதற்க்கான பல பதில்கள் பல முதியவர்கள் முன்வைத்தால் இளையவர்களது வாழ்க்கைக்கு உதவும்.இருந்தாலும் நாம் பல விடயங்கள் இளையவர்களிடம் கற்க்கவேண்டியுள்ளது ஆனால் ஏற்க்க மாட்டோம்.ஒரே பதில் சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது இதற்க்கான அர்த்தம் பல மாதிரியும் எடுக்கமுடியும். பண்கொம்.நெற் பண் த.பாலா

 • சச்சி:

  சிறியவர் தொல்லைகாப்பியன் அவர்களே நான் எழுதியதை தாங்கள் முழுமையாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன். ஆசான் சம்பளம் வாங்கிக்கொண்டு கல்வி கற்றுக்கொடுக்கும் ஒரு ஊழியரே தவிர தம் மாணவர்களின் எதிர் காலத்தைப்பற்றி சிந்திக்கும் ஆசான்கள்
  ஒரு சிலரே உள்ளனர்.நன்றாக கவனியிங்கள் காப்பியன் அவர்களே;ஒரு சிலரே உள்ளனர்.

 • தொல்காப்பியன்:

  பெரியவர் சச்சி: என்பவர் கூறியுள்ளார் சந்தேகமே இல்லை தாய் தந்தையை தவிர இவ்வுலகில் மாற்றார் எவரும் காரணம் இல்லை என்று இது வரவேற்க தக்கது ஆனால் ஆசான் சம்மளம் வாங்கிக்கொண்டு கல்வி கற்றுக்கொடுக்கும் ஒரு ஊழியரே என்று சொன்னதும் என் நெஞ்சே வெடித்தது போல் உள்ளது • ஏனெனில் இந்த பெரியவர் எனது அப்பாவின் நண்பர் ஆகயால் என்னைப்போல் இளயோர்கள் இதை தாங்கிக்கொள்ள மாட்டார்கள் என்றாலும் இதற்க்கு விளக்கம் கொடுத்தே ஆகவேண்டும் பிள்ளைகள் மேல் பெற்றோர்கள் வைப்பது பாசம் ஆசான் பிள்ளைகள் மேல் தெளிப்பது அறிவுட்டல் அரசியல்ல இது எல்லாம்சகசியம் அப்பா

 • சச்சி:

  சந்தேகமே இல்லை தாய் தந்தையை தவிர இவ்வுலகில் மாற்றார் எவரும் காரணம் இல்லை ஒரு பிள்ளை சிறந்தோனாய் வளருவதற்கு.ஆசான் சம்பளம் வாங்கிக்கொண்டு கல்வி கற்றுக்கொடுக்கும் ஒரு ஊழியரே தவிர தம் மாணவர்களின் எதிர் காலத்தைப்பற்றி சிந்திக்கும் ஆசான்கள் ஒரு சிலரே உள்ளனர்.மற்றது சமூகம் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் சமூகம் இது.தாய் தந்தையின் சிறந்த வளர்ப்பில் பிள்ளை சிறப்போடு வளர்ந்தாலும் அவனை சீரழித்துவிடும் இச் சமுதாயம்.அப்படியிருந்தும் அவன் இச் சமுதாயத்தில் சான்றோனாய் வந்துவிட்டால் அதற்க்கு காரணம் அவனது சுய முயற்ச்சியே.அது சரி அவனது சுய முயற்ச்சிக்கு தூண்டுகோல் அவனது பெற்றோர்தானே?

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  பின் லாடனிற்கும் பாத்திமாவிற்க்கும் பிறந்து மனிதநேயத்தை நேசிக்கும் நல்ல பிள்ளையாக உருவாகியிருந்தாலோ, Ban-Ki Moon இற்கும் Mon-Key Spoon இற்கும் பிறந்து தீவிரவாதத்தை விதைக்கும் கூடாத பிள்ளையாக உருவாகியிருந்தாலோ, Michael Dell இற்கு பிறந்து பழமைகளை நாடும் நல்ல பிள்ளையாக உருவாகியிருந்தாலோ, லக்ஷ்மி மிட்டாலிற்கு பிறந்து கலாச்சாரத்தை சீரழிக்கும் கூடாத பிள்ளையாக உருவாகியிருந்தாலோ, Somalia நாட்டில் பிறந்து உலக பணக்கார பட்டியலில் இடம்பெறும் அளவுக்கு சுயவளர்ச்சியில் வளர்ந்து உருவாகியிருந்தாலோ எந்த பிள்ளை எவருக்கு பிறந்திருந்தாலோ, அப்பிள்ளை அந்த தாயின், தந்தையின், ஆசானின், நல்வழிகளுக்கிடையே முறைக்கேற்ப வழிநடத்தப்பட்டிருந்தாலும் அந்த பிள்ளை எந்த சமூகத்தில் வளர்கிறானோ அந்த சமூகமே இறுதியில் நிர்ணயிக்கிறது அந்த பிள்ளை நல்ல பிள்ளையாவதும் கூடாத பிள்ளையாவதும். புலம்பெயர் நாடுகளில் தாய், தந்தை, ஆசான் & சுயமாக தமது கடமைகளை தாண்டிய பின் சமூகமே ஒரு பிள்ளையின் உருவாக்க நிலையில் பெரும்பங்கு கொள்கிறது என்பது என் வாதம்.
  இதனால் தானே உங்கள் கேள்வியில் புலம்பெயர் ´சமூகத்தில்´ என்ற முக்கிய சொல்லை underline பண்ணியிருக்கப்பட்டிருக்கிறது.

 • T,BALAKUMAR panncom.net:

  ஆசான் என்பது ஐரோப்பா கலாச்சாரம் என்று எண்ணினால்.ஆசான் ஆசானை இல்லை தோழனாவான் அவர் பிள்ளைகளுடன் ஒரு சாதாரணமனிதன் போல் பழகுவதால் ஆசானுடைய கெட்டபழக்கங்களும் தொற்றலாம்.அதேபோல் சமூகம் நான் டென்மார்க்கை வைத்து விளக்கம் தரலாம் என நினைக்கின்றேன்.நாம் வாழும் இடம்,தமிழர்களின் எண்ணிக்கை,தமிழர்களின் பழக்கவளக்கங்கள், அந்த தமிழர்களின் பொழுதுபோக்கு, அவர்களுடைய ஒற்றுமைப்போக்கு.இப்படி பலதை கணக்கெடுக்கப்பட்டால் எவர் ஒருவர் தமிழ் சமூகங்களை ஒதுக்கிவிட்டு டெனிஸ்சமூகத்துடன் இணைவதாய் நினைத்து அவனுடனும் சரியாக இணையாமல்,தமிழனை புறம்தள்ளி கடைசியில் பிள்ளைகள் டெனமார்கு மாப்பிள்ளைகளும் தாய் தகப்பன் வயோதிபர்மடமென மெல்லநகர்கின்றது இதுவே காலப்போக்கின் முழு நகர்வாகும்.தமிழர் சமூகத்துடன் இணைவதில் நல்லவர்களே ஆனால் அதிகமானோர் ஒருவரை ஒருவரை பார்த்தே வாழ்கின்றார்கள். உதாரணமாக ,வீடு,தளபாடங்கள்,வாகனங்கள்,கல்வி,பிள்ளைகளின்வாழ்க்கை,திருமண ஒழுங்குகள், இன்றைய யதார்த்தங்கள் உண்மைகளும் கூட.டென்மார்க் இன்று பிரதி எடுத்து தான் பல இளைஞ்ஞிகள் தம் வாழ்க்கையை நிர்ணயம் செய்கிறார்கள்.எனவே தாய்,தாய் காட்டி தந்தை,தந்தையும்,தாயும்(இதில் ஒருவர் மாறியும் இருக்கலாம்) ஆசான் (புலத்து ஆசான் யாவரும் அறிந்ததே) சமூகம் பற்றி புலத்துக்குள் சரியான சமூகத்துள் வாழ்ந்தால் சமூகத்தை இவர்கள் திருத்துவார்களோ இல்லை சமூகம் இவர்களை திருத்துமோ அது அவர்களுக்கே தெரியுமோ? பண்கொம்.நெற் பண் த.பாலா

 • vinothiny pathmanathan:

  இந்தக் காலத்திற்கு தேவையான ஒரு கருத்துக்களத்தை கொண்டு வந்தமைக்கு முதலிலே உங்களுக்கு என் நன்றியும் பாராட்டுக்களும் .

  ஒரு பிள்ளையை நல்ல பிள்ளையாக உருவாக்குவதில் தாய், தந்தை ,ஆசான் ,சமூகம் எல்லோரது பங்கும் கணிசமாக இருக்கிறது.
  இதிலே தாயின் பங்கு எல்லோரையும் விட அதிகமாக இருப்பதை மறுப்பதற்கில்லை .இருந்தாலும் தாய் இல்லாமல் தந்தையாரால் வளர்க்கப்பட்ட எத்தனை பிள்ளைகள் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பதையும் ,தந்தையார் இல்லாமல் தாயாரால் வளர்க்கப்பட்ட சில பிள்ளைகள் வாழ்க்கையை வாழத் தெரியாமல் அல்லாடுவதையும் ,இருவருமே இருந்தும் வசதிகளும் இருந்தும் வாழ்வை தொலைத்து விட்டு தேடிக்கொண்டு இருப்பவர்கள் என்று எத்தனை விதமான பிள்ளைகளைப் பார்க்கின்றோம். புலம் பெயர் நாடு என்று பார்க்கும் போது தாய் தந்தை இருவருமே வேலைக்கு செல்பவர்களாக இருப்பதனால் நிச்சயமாக பிள்ளையின் நல்லது கெட்டதுகளிலே இருவருக்குமே சம பங்கு உண்டு. ஆகவே
  புலம் பெயர் நாடுகளிலே பார்க்கும் போது நாங்கள்(அதாவது பெற்றோர்கள்) எங்களால் முடிந்தவரை பிள்ளைகளுக்கு
  நல்ல கெட்ட விடயங்களை சொல்லி புரிய வைத்தாலும் கலாச்சாரமும் அதன் மாற்றங்களும் பிள்ளைகளை கெட்ட வழிகளிலே திசை திருப்பி விடும் போது அதன் விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்க முடியும் .பிள்ளைகளை நல்லவர்களாக வளர்க்க நாம் முற்பட்டாலும் அதற்குப் பின்னர் பிள்ளைகள் பதின்ம வயதுகளை எட்டும் போது தங்கள் சொந்த வாழ்க்கை நான் தான் முடிவெடுப்பேன் ,இதிலே நீங்கள் தலையிட வேண்டாம் என்ற நிலை வரும் வரும் போது தான் இந்த நாடுகளைப் பொறுத்தவரை பிள்ளைகளுக்கும் எமக்கும் இடையே உள்ள எல்லை எது என்ற உண்மையே எமக்கு புரிய வரும் . அத்துடன் இந்த விடயத்தை பொறுத்தவரை பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பது/ வளர்வது என்பது (புலம்பெயர் நாடுகளிளைப் பொறுத்தவரை )அவர்களின் சுய செயற்பாடுகளின் அடிப்படையிலேயே தான் உள்ளது .இதில் பெற்றோர்களாகிய நாங்களோ ,அல்லது ஆசானோ ,சமூகமோ ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே என்பதுவே இன்றைய காலத்தின் யதார்த்தம் .

 • தொல்காப்பியன்:

  கருத்துக்களம் நன்றாகத்தான் பொய் கொன்றே இருக்கின்றது இன்னும் சில புதிய புதிய கருத்தாளர்கள் வந்தால் மிகவும் சூடு பிடித்துக்கொண்டே போகலாம்
  என்றுதான் நான் நினைக்கின்றேன் • ஏனெனில் எனது கருத்து நல்லபிள்ளைகளை
  உருவாக்குவது என்பதே என்ற கேள்வியில் முதலில் தாய் என்று குறிப்பிட்டேன்
  இப்போதும் அதை தான் குறிப்புடுகிறேன் ஏனெனில் பிள்ளைகள் நல்லவர்களாக
  வருவதற்கு தயை விட இன்னும் ஒருவனுக்கும் பங்குஉண்டு அவன்தான் எம்மை படைத்த ஆண்டவன் அவன் ஒருவனுக்குதான் தெரியும் இன்று பிறந்த
  பிள்ளை ஒன்றை எந்த முறையில் கொண்டு செயல் பட வேண்டும் என்பதும் அவனுக்கு தெரிந்ததே

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   என்ன தந்தையின் கடமையாக மீன் வாங்க சந்தைக்கு போகமுதல் தாயின் கடமை தனிய என்று கூறினீர்கள்.
   5 மணித்தியாலங்கள் கடந்தபின் கடவுளுக்கும் கடமை இருக்கிறது என்று திடமில்லாமல் கருத்தில் மாற்றம்…..
   சந்தை போய் மீன், கோழி வாங்கி வந்த தந்தைக்கு வீட்டில் தாய் சோறு வைக்கவில்லாததால் உங்கள் வாதத்தில் கடவுளும் என்று மாற்றம் ஏற்பட்டதோ??????
   🙂 🙂 🙂

 • தொல்காப்பியன்:

  உங்கள் கேள்வியிலேயே விடை உண்டு.அதாவது நான் யோசித்த வரை எங்குமே
  தந்தையை காட்டிய பின்புதான் தாயை பதிவு செய்வார்கள் ஆனால் இதற்குரிய கேள்வியே தாயா? தந்தைய ? என்றே ஆரம்பத்தி இருக்கின்றிர்கள் ஆகயால்
  இந்தகேள்விக்கு உண்மையான விட தாயே தான் எந்தகுளந்தையும்.நல்லகுளந்தைதான்.மண்ணில் பிறக்கைலேஅது .நல்லவனாவதும் .தியவனாவதும் .அன்னை.வளப்பினிலே
  தொட்டிலில் இருந்து கட்டிலில் போகும்வரை தன்பிள்ளைகளை
  நல்லமுறையில் கொன்று போக வேண்டும் என்று நினைத்து கொண்டே இருப்பவள் தான் தாய் தாய் தாய் ஒரு தந்தயின் கடமை என்னவோ வீட்டில்
  அரிசி மீன் கோழி வேண்டிகொடுப்பது தான் இப்போது கூட அங்கேதான் சென்றுகொண்டே இருக்கின்றேன் நன்றி மீண்டும் வருவேன்

 • நல்ல விடயம். ஊரில் பிள்ளையின் எதிர்காலம் தாயில் தங்கி இருந்தது. புலம்பெயர் நாட்டில் பிள்ளைகளை நல்லவராக்குவது தந்தையிலும் தாயிலும் அரைக்கரைவாசி தங்கியுள்ளது. இங்கு பிறந்தபிள்ளை கூடுதலாக தந்தையுடன் தான் இருக்க விரும்புவார்கள். அதனால் தான் நல்ல பிள்ளைகளை உருவாக்குவது இருவரிலும் தங்கியுள்ளது. அதற்குபின்
  ஆசானில் தங்கியுள்ளது.

 • T,BALAKUMAR PANIPPULAM:

  உங்கள் கேள்வியிலேயே விடை உண்டு.அதாவது பிள்ளை தன் தாய் பிரசவத்தின் போதே தாய்ப்பாலுடன் இணைகின்றது.( இது புட்டிப்பால் கொடுக்கும் தாய்க்கு பொருந்தாது) தாய் தந்தையை காட்டி தந்தையின் அரவணைப்பும் சேர்ந்து ஆசானிடம் கையளிக்கப்பட்டு தாய்,தந்தை, ஆசானிடம் ஒப்படைக்கப்படுகிறது.ஆசான் கையில் உள்ளபிள்ளை சமூகத்தையும் இணைத்து கல்வியை பெற்று அது நல்லவன் ஆவதும்,தீயவன் ஆவதும் கடைசியில் அவனிடமே தங்கியுள்ளது.படித்தவன் எல்லாம் புத்திசாலிகள் ஆவதில்லை.படிக்காதவன் எல்லாம் புத்திஅற்றவன் இல்லை.எனது கருத்து தாய்,தந்தை, ஆசான்,சமூகம் என்ற தொடரே சரியாகும். பண் த.பாலா பண்—————————-?

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  அச்சா கேள்வி இது…
  பிறகென்ன விளக்கெல்லாம் ஏற்றிவைச்சுப்போட்டு கேள்வியை முன்வைத்திருக்கிறியள். குறிப்பிடப்பட்ட எல்லாரையும் கடந்த கடவுள் என்றால்தான் ஏற்க்கப்படும்.

 • Krushna:

  மாற்று கருத்துக்கே இடம் இல்லை ஒரு தாய் தான் ஒரு நல்ல பிள்ளையை உருவாக்க முதல் காரணி அதன் பின்பே மற்றவயால் எல்லாம், ஒரு பிள்ளை தனது ௦-11 வயது வரை ஒரு தாயை தான் முதலில் பிள்ளை நம்பும், பெரும்பாலும் ஒரு பிள்ளையின் குணாதிசயங்கள் உருவாகின்றன. ஆகவே ஒரு பிள்ளைக்கு இக்காலத்தில் நஞ்சு ஊட்டபட்டல் அது நஞ்சாகவும், அமுது ஊட்டபட்டல் அது அமுதகவும் அதன் செயல்பாடுகள் அமையும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்