Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



இங்கிலாந்தில் 29 வயதில் ஒருவர் தாத்தா ஆகியுள்ளார். இதையடுத்து இங்கிலாந்தில் மிகக் குறைந்த வயதில் தாத்தா ஆனவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் உள்ள பிரிட்ஜென்டைச் சேர்ந்தவர் ஷெம்டேவிஸ் (29). அவரது மகள் தியா (14). தியா தன்னுடன் படிக்கும் 15 வயது மாணவனுடன் நெங்கிப் பழகியதில் கர்ப்பமானாள். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். இதன் மூலம் ஷெம்டேவிஸ் 29 வயதிலேயே தாத்தாவாகியுள்ளார். இதில் விந்தை என்னவென்றால் டேவிஸ் தனது 14 வயதில் உடன் படித்த செல்லி என்ற மாணவியுடன் பழகியதில் தான் தியா பிறந்தாள். தியா பிறந்தபோது டேவிஸுக்கு வயது 15.

இளம் வயதில் தாத்தாவிகயுள்ளது பற்றி டேவிஸ் கூறியதாவது,

தியாவே ஒரு குழந்தை இந்நிலையில் அவளுக்கே ஒரு குழந்தையா என்று நினைக்கையில் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. எனது மகள் கர்ப்பம் அடைந்த செய்தி கேட்டு திடுக்கிட்டேன். ஆனால் நான் 14 வயதில் செய்த அதே தவறைத் தான் என் மகளும் செய்திருக்கிறாள் என்று நினைத்து சமாதானம் ஆனேன் என்றார்.

இது குறித்து தியாவின் தாய் செல்லி கூறுகையில், நான் எந்த தவறு நடந்துவிடக்கூடாது என்று பயந்தேனோ அது நடந்துவிட்டது. நான் செய்த தவறையே என் மகளும் செய்துவிட்டாள். இதுபோன்று செய்யக்கூடாது என்று எச்சரித்தும் செய்திருக்கிறாள் என்றார்.

4 Responses to “29 வயது இங்கிலாந்து இளைஞன் தாத்தாவானார்”

  • சச்சி:

    அவசர தாத்தா.

  • T,BALAKUMAR panncom.net:

    இது என்ன அதிசயம் ஒரு வயதே ஆன பணிப்புலம்.நெற் ஒரு குழந்தை.இந்தக்குழந்தை ஒரு குழந்தையை பெற்று ஓரிரு நாட்க்களே இன்னும் இது முதல்பிரசவம் என்பதால் இக்குழந்தை இன்னும் வைத்தியசாலையின் பார்வையில் இருக்கின்றது.இக்குழந்தை வெகுவிரைவில் பெற்றோருடன் வந்தவுடன் ஒரு பெரும் விழாவுடன் குழந்தையை வெளிஉலகில் உலாவரும்(.பண்கொம்.நெற்) உங்கள் பண் த.பாலா பண்கொம்.நெற்

    • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

      தாத்தா ஆகுபவர்?

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    இங்கிலாந்தில் இங்கிலிசு படிக்கலாம் என்று பலர் ஐரோப்பிய நாடுகளில் திருப்தியோடு இருந்துவிட்டு எல்லாத்தையும் விட்டுவிட்டு குழந்தைகளை குடும்பத்தோடு கூட்டிக்கொண்டு செல்கிறார்கள் என்பது இந்த செய்தியை வாசித்தபின் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது….வந்திட்டு போகட்டுமே…தமிழர் வேலையில்லாட்டியும் இப்படி செய்யமாட்டினம்…

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்