உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்விஜய் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த நடிகராக விக்ரமும், சிறந்த நடிகையாக அஞ்சலியும் தேர்வாகியுள்ளனர். சிறந்த வில்லனுக்கான விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது. எந்திரன் படத்தில் நடித்ததற்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் மொத்தம் 149 படங்கள் விருதுப் போட்டியில் கலந்து கொண்டன. அதிலிருந்து ரசிகர்கள் தேர்வு செய்த கலைஞர்களுக்கு விருது அளிக்கப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு சிறந்த வில்லன் நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. எந்திரன் படத்தில் அவர் நடித்த ரோபோ கதாபாத்திரத்திற்காக இந்த விருது கிடைத்துள்ளது. விருதினை ரஜினியின் மருமகன் தனுஷ் பெற்றுக் கொண்டார்.

ராவணன் படத்தில் நடித்த விக்ரமுக்கு சிறந்த நடிகர் விருதும், அங்காடித் தெரு படத்தில் நடித்த அஞ்சலிக்கு சிறந்த நடிகை விருதும் கிடைத்தன.

அங்காடித் தெரு படத்தின் இயக்குநர் வசந்த பாலனுக்கு சிறந்த இயக்குநர் விருது கிடைத்தது. இந்தப் படமே சிறந்த படமாகவும் தேர்வானது.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார். மைனா பட நாயகன் விதார்த் சிறந்த அறிமுக நாயகனாகவும், அமலா பால் சிறந்த அறிமுக நாயகி விருதையும் பெற்றனர்.

சிறந்த துணை நடிகையாக சரண்யாவும், சிறந்த துணை நடிகராக தம்பி ராமையாவும் விருது பெற்றனர். காமெடியனாக சந்தானம் தேர்வானார்.

பாடலாசிரியருக்கான விருதை வைரமுத்தவும், சிவாஜி கணேசன் விருது கே.பாலச்சந்தருக்கும், பொழுதுபோக்கு படத்துக்கான விருது சிங்கம் படத்துக்காக சூர்யாவுக்கும் கிடைத்தது.

One Response to “விக்ரம் சிறந்த நடிகராகவும், ரஜினி சிறந்த வில்லனாகவும் விஜய் விருதுகள்”

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    வில்லனாக நுழைந்தவர் வில்லனாக விடைபெற போகவதாக அறிகுறிகள்….

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்